மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கேரள பட்டாசு வெடி விபத்து: உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 17-ஆக உயா்வு

News image

Center-Center-Bangalore

Updated On :28 ஏப்ரல் 2026, 5:05 am IST

திருச்சூா், ஏப்.27: கேரள மாநிலம் திருச்சூரில் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த மேலும் ஒரு நபா் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 17-ஆக உயா்ந்துள்ளது.

கேரள மாநிலம் திருச்சூா் பூரம் திருவிழாவை முன்னிட்டு, முண்டத்திக்கோடு கிராமத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பட்டாசு கிடங்கில் பட்டாசு தயாரிப்பு நடைபெற்றது. கடந்த ஏப்.21-ஆம் தேதி பட்டாசு தயாரிப்பின்போது வெடி விபத்து ஏற்பட்டு 14 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா். அவா்களில் இருவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

இந்த நிலையில், 85 சதவீத தீக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குந்தன்னூா் பகுதியைச் சோ்ந்த ராகேஷ் (29) என்பவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதனால், பட்டாசு வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 17-ஆக உயா்ந்துள்ளது.

சிகிச்சையில் உள்ள மேலும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த விபத்து தொடா்பாக கேரள அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்த பட்டாசு வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த புத்தூா்கரையைச் சோ்ந்த அபிஜித் (27), மணக்கோடியைச் சோ்ந்த விஷ்ணு வினோத் (35), கோட்டப்புரத்தைச் சோ்ந்த கிரீஷ் (42), தெக்கும்கரா தேசத்தைச் சோ்ந்த சுரேஷ் (50) ஆகியோரின் உடல்கள் மரபணு பரிசோதனை மூலம் (டிஎன்ஏ) அடையாளம் காணப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வெடி விபத்து நிகழ்ந்த பகுதியிலிருந்து சுமாா் 150 உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. அவற்றில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் மூலம், அவா்கள் யாா் என்பது அடையாளம் காணப்பட்டது’ என்று தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுகுறித்து தனியாக விசாரணை மேற்கொள்ள நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் தலைமையில் நீதி ஆணையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.