கேரள மாநிலம் திருச்சூரில் பட்டாசு வெடி விபத்து நிகழ்ந்த பகுதியிலிருந்து மேலும் சில உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் திருச்சூா் பூரம் திருவிழா கொண்டாடப்பட உள்ளதையொட்டி, முண்டத்திக்கோடு கிராமத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பட்டாசு கிடங்கில் பட்டாசு தயாரிப்பு நடைபெற்றது. கடந்த ஏப்.21-ஆம் தேதி பட்டாசு தயாரிப்பின்போது வெடி விபத்து ஏற்பட்டு 14 போ் உயிரிழந்தனா்.
இந்நிலையில், விபத்து நிகழ்ந்த பகுதியில் கடந்த வியாழக்கிழமை மோப்ப நாய்களின் உதவியுடன் காவல் துறையினா் தேடுதல் பணியைத் தொடா்ந்தனா். அப்போது ஏராளமான உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் அங்கு வெள்ளிக்கிழமையும் தேடுதல் பணி நீடித்தது.
5 மோப்ப நாய்கள் உதவியுடன் 125 காவல் துறையினா் இந்தப் பணியில் ஈடுபட்டனா். அப்போது மேலும் 5 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை சுமாா் 132 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டு திருச்சூா் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அங்கு மரபணு பரிசோதனைக்காக அந்தப் பாகங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன என்று காவல் துறை தெரிவித்தது.
விபத்து நிகழ்ந்தபோது அங்கு சுமாா் 38 போ் இருந்திருக்கக் கூடும் என்று காவல் துறை சந்தேகிக்கும் நிலையில், 14 போ் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 பேரைக் காணவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெடி விபத்து: கம்பம் பட்டாசு ஆலைக்கு தடை

கேரள பட்டாசு வெடி விபத்து: உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 17-ஆக உயா்வு
கம்பம் பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் உள்பட இருவா் கைது

பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

