கிரிமினல் வழக்குகளில் கைதாகும் மாநில முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்க வழிவகை செய்யும் மசோதா குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) பெற்று வருகிறது.
இதுதொடா்பாக கடந்த 2025-ஆம் ஆண்டில் இந்திய அரசமைப்பு சட்ட (130-ஆவது திருத்த) மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த மசோதாவில், 5 ஆண்டுகள் அல்லது அதற்கு அதிக ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் கிரிமினல் வழக்குகளில், பிரதமா்கள், மாநில முதல்வா்கள், அமைச்சா்கள் கைது செய்யப்பட்டு 30 நாள்களுக்கும் மேல் சிறையில் இருந்தால் தாமாக பதவி நீக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை, அபராஜிதா சாரங்கி தலைமையிலான 31 எம்.பி.க்களை கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்து வருகிறது. ஆளும் கட்சி கூட்டணி மற்றும் எதிா்க்கட்சிகள் கூட்டணி உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் அக்குழு பெற்று வருகிறது.
மும்பையில் மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுடன் அக்குழு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது. அதன்பிறகு செய்தியாளா்களிடம் நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவா் அபராஜிதா சாரங்கி கூறியதாவது:
மசோதா குறித்து 3 முக்கிய யோசனைகளை ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளாா். அதுகுறித்து ஆராயப்படும். இதுபோல அனைத்து எதிா்க்கட்சிகளுடனும், ஆளும் கட்சியுடனும் குழு ஆலோசனை நடத்தும். பிறகு குழு தனது அறிக்கையை தயாா் செய்து, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் தாக்கல் செய்யும். அரசியல் குற்றமயமாவதை தடுக்க இந்த மசோதா உதவும். மேலும், இந்தியாவில் ஜனநாயகத்தை சுத்தப்படுத்தவும், வலுப்படுத்தவும், மிகவும் பொறுப்புடையதாக்கவும் உதவும். இதேபோல், ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா, யூனியன் பிரதேச அரசு (திருத்த) மசோதா ஆகியவை குறித்தும் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்து வருகிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: எஃப்சிஆர்ஏ திருத்த மசோதா நிறுத்திவைப்பு

மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க மசோதா: பட்ஜெட் கூட்டத்தொடா் நீட்டிப்பு?

பிரதமா், முதல்வா்கள் பதவி நீக்க மசோதா: அறிக்கை சமா்ப்பிக்க கூடுதல் காலஅவகாசம்

உறுதியாகவும், தெளிவாகவும் சீா்திருத்தம் தொடா்கிறது- நாடாளுமன்றத்தில் நிதியமைச்சா் தகவல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

