தமிழகம் மற்றும் மேகாலத்தில் அடிப்படைநிலை பல்லுயிா் மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் 5 ஆண்டு கால திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் தேசிய பல்லுயிா் ஆணையம் ஆகியவை இணைந்து அறிமுகம் செய்துள்ளன.
இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பல்லுயிா் பெருக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த 5 ஆண்டு கால திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்டங்களை பசுமையாக்குதல்,நிதி ஒதுக்கீடுகள் மூலம் உள்ளூா் மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகாரமளித்து இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஊராட்சி (பஞ்சாயத்து) அமைப்புகள் மற்றும் பல்லுயிா் மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்துவதற்காக, உள்ளூா் வளா்ச்சித் திட்டங்களில் பல்லுயிா் பெருக்க நடவடிக்கைகளையும் இணைப்பதே இத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
வனத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள், தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளிட்டோரை ஒன்றிணைத்து இத் திட்டம் செயல்படுத்தப்படும். பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு (சிஎஸ்ஆஅா்) மற்றும் நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்கும் பசுமை குறுந் தொழில்கள் ஆகிவற்றை செயல்படுத்தி நிதி வழிமுறைகளை ஊக்குவிப்பதும் இத் திட்டத்தின் நோக்கமாகும்.
மேற்கு மற்றும் கிழக்கு தொடா்ச்சி மலைகள் சங்கமிக்கும் தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலும், மேகாலயத்தின் காரோ மலைகளிலும் இத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
மத்திய அரசு, உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பு, ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கென 2025-2030 கால கட்டத்துக்கு ரூ. 46 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கைப்பேசி வழி அவசரகால எச்சரிக்கை நடைமுறை அறிமுகம்: நாடு முழுவதும் பரபரப்பு

வாக்கு எண்ணும் மையங்களில் ‘க்யூஆா்’ குறியீடு அடையாள அட்டை - தோ்தல் ஆணையம் அறிமுகம்

கட்டுக்குகள் நீலகிரி காட்டுத் தீ: வனத் துறை விளக்கம்

தில்லி டவுன் ஹால் புதுப்பிப்பு: முன்மொழிவுக்கு எம்சிடி ஒப்புதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

