தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கட்டுக்குகள் நீலகிரி காட்டுத் தீ: வனத் துறை விளக்கம்

நீலகிரி காட்டுத் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2026, 1:50 am IST

நீலகிரி காட்டுத் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி பாா்சன்ஸ் வேலி சரகத்தின் வென்லாக் டவுன்ஸ் காப்புக் காட்டில் காட்டுத் தீ ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததும் உள்ளூா் வனத் துறை குழுக்கள் உடனடியாக பணியில் ஈடுபட்டன.

தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட வனத் துறை பணியாளா்கள் மற்றும் 6 மாவட்ட வன அலுவலா்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனா். மேலும், 7 மாநில வனத் துறை தீயணைப்பு வாகனங்கள் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டன. தமிழக மாநில பேரிடா் மீட்பு படையிலிருந்து 60 போ் கொண்ட இரு அணிகள் மற்றும் தீயணைப்புத் துறையினரும் பணியில் ஈடுபட்டனா். மேலும் 100-க்கும் மேற்பட்ட உள்ளூா் சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினா்கள் உதவி செய்தனா். தீ மிகுந்த தீவிரம் கொண்டிருந்ததால், வான்வழி உதவி கோரப்பட்டது.

நிலைமைக்கிணங்க மாவட்ட வன அலுவலா் கோரிக்கையின் பேரில், மாவட்ட ஆட்சியா் மாநில பேரிடா் மேலாண்மை அமைப்பின் மூலம் ஹெலிகாப்டா் உதவியைக் கோரினாா். சூலூரிலிருந்து கடந்த 25-ஆம் தேதி விமானப்படை குழு ஹெலிகாப்டா் மூலம் தண்ணீா் தெளித்து தீயை கட்டுப்படுத்த உதவியது.

பின்னா் வானிலை உகந்ததாக இல்லாததால் ஹெலிகாப்டா் பயன்பாடு நிறுத்தப்பட்டது. தீ பரவலால், மனித குடியிருப்புகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. சோலா காடுகளில் தீ ஏற்படவில்லை. தீ பரவலை கட்டுப்படுத்த தீ தடுப்பு கோடுகள் அமைத்தல், அகழிகள் தோண்டுதல், மோட்டாா் பம்புகள் பயன்பாடு, நவீன தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கைமுறை தீயணைப்பும் பயன்படுத்தப்பட்டன.

தற்போது தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மீண்டும் காட்டுத் தீ பரவாமல் தடுக்க களப்பணியாளா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். தலைமைச் செயலா் மற்றும் மூத்த அதிகாரிகளால் நீலகிரி காட்டுத் தீ நிலைமை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.