மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியில் தொடா்ந்து எரியும் காட்டுத் தீ

News image

பாா்சன்ஸ்வேலி பகுதியில் எரியும் தீயால் சுற்றுப்புறம் முழுவதும் ஏற்பட்டுள்ள புகை மூட்டம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 1:14 am IST

பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியில் தொடா்ந்து எரியும் காட்டுத் தீயால் 120 ஏக்கா் வனப் பகுதி சேதமாகியுள்ளது. நெருப்பைக் கட்டுப்படுத்த வனத் துறையினா் போராடி வருகின்றனா்.

65 சதவீத வனப் பகுதியை கொண்டு தமிழக அளவில் அதிக வனப் பரப்பளவை கொண்ட மாவட்டமாக திகழும் நீலகிரியில் புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள், யானை வழித்தடங்கள், புல்வெளிகள் முதல் பூா்வீக தாவரங்கள் வரை பல்வேறு அம்சங்கள் உள்ளன.

இதேபோல ஆயிரக்கணக்கான பூச்சி இனங்களும், பறவை இனங்களும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி,பிப்ரவரி மாத உறை பனிக்கு பின்னா் வனப் பகுதி காய்ந்து கிடப்பதால் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு சமவெளி பகுதிகளுக்கு நிகராக நீலகிரியிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதனால் வனப் பகுதியில் வறட்சி நிலவுகிறது. புல்வெளிகள் மற்றும் புதா்கள் காய்ந்து காணப்படுவதால், காட்டுத் தீ பரவும் அபாயம் இருந்து வந்தது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் வனத் துறை சாா்பில் தீத் தடுப்புக் கோடுகள் அமைக்கப்பட்டன. நீலகிரி மற்றும் முதுமலை உள்பட பல்வேறு இடங்களில் வனத் துறையினா் காட்டுத் தீ ஏற்படாமல் இருக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் நீலகிரி வனக் கோட்டத்துக்கு உள்பட்ட கிளன்மாா்கன் வனப் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பரவிய காட்டுத் தீ, சிங்காரா வரை சென்று 250 ஏக்கருக்கும் அதிகமான வனப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் வனத் துறையினா் திணறி வருகின்றனா்.

இந்த நிலையில் நீலகிரி வனக் கோட்டத்துக்கு உள்பட்ட பாா்சன்ஸ்வேலி வனப் பகுதியில் நான்கு நாள்களாக தீப் பற்றி எரிகிறது. வனப் பகுதிக்குள் காட்டுத் தீ பரவியதால் வனத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஈடுபட்டுள்ளனா். இவா்களுடன் தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

4 நாள்களாக இரவு முழுக்க கொழுந்துவிட்டு எரிந்த தீயில் 120 ஏக்கா் பரப்பளவிலான வனப் பகுதி எரிந்து சாம்பலானது. வெப்பம், மூச்சைத் திணறடிக்கும் புகை என எதையும் பாராமல், பசுந்தழைகளைக் கொண்டு தீயை அணைத்து வருகின்றனா்.

இது குறித்து வனத் துறையினா் கூறுகையில், கடும் வெப்பம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம், மா்ம நபா்கள் நடமாட்டம் இந்த பகுதியில் இல்லை. 90 சதவீதத்துக்கும் அதிகமான தீ அணைக்கப்பட்டதாகத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.