மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா!

சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியைத் தொடங்கியது பற்றி...

News image

சந்திரசேகர் ராவுடன் கவிதா - X

Updated On :25 ஏப்ரல் 2026, 10:52 am IST

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

இன்று ஹைதராபாத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். 'தெலங்கானா ராஷ்டிர சேனா'(டிஆர்எஸ்) என்ற புதிய கட்சியைத் தொடங்குவதாகவும் 2029 சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளார்.

சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு மாற்றாக தனது கட்சி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர், தெலங்கானா மேலவை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்த கவிதா, தந்தை சந்திரசேகர் ராவுடன் கருத்து வேறுபாட்டில் இருந்து வந்தார். தொடர்ந்து கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஆண்டு கட்சியில் இருந்து கவிதா இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து விலகிய கவிதா, விரைவில் புதிய கட்சியைத் தொடங்குவேன் என கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தார். அதன்படி இன்று(ஏப். 25) அவர் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

தந்தையின் கட்சி பெயர்

சந்திரசேகர் ராவின் கட்சியின் பெயர் முதலில் 'தெலங்கானா ராஷ்டிர சமிதி'(டிஆர்எஸ்) என்று இருந்தது. பின்னர் இந்தியா முழுவதும் கட்சியை கொண்டுசெல்லும்பொருட்டு அவர் தனது கட்சியை 'பாரத ராஷ்டிர சமிதி'(பிஆர்எஸ்) என்று பெயர் மாற்றினார்.

தற்போது கவிதா, தனது தந்தை தொடங்கிய கட்சியின் பெயரிலேயே புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

தந்தையின் 'தெலங்கானா ராஷ்டிர சமிதி' (டிஆர்எஸ்) க்குப் பதிலாக 'தெலங்கானா ராஷ்டிர சேனா' (டிஆர்எஸ்) என்று பெயரை அறிவித்துள்ளார்.

Summary

chandrashekar rao daughter Kavitha launches new political party TRS

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.