மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி 62.18 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் இன்று காலை தொடங்கிய நிலையில், வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
16 மாவட்டங்களில் உள்ள 152 சட்டப்பேரவைத் தொகுதிகளில், முன்னெப்போதும் இல்லாத அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 3.60 கோடி வாக்காளர்களில் 62.18 சதவீதத்தினர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி,
11 மணி நிலவரப்படி 41.11 சதவிகித வாக்குகள் பதிவாகின நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 62.18 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக, மேற்கு மேதினிபூரில் - 65.77%, பாங்குரா - 64.58%, ஜார்கிராம் - 65.31%, தெற்கு தினாஜ்பூர்% - 63.05%, பிர்பூம் - 63.93%, கிழக்கு மேதினிபூர் - 62.90% வாக்குகள் பதிவாகியுள்ளது.
குறைந்தபட்சமாக, மால்டாவில் - 58.45%, டார்ஜிலிங் - 59.81%, புருலியாவில் - 59.83% வாக்குகள் பதிவாகியுள்ளது.
இன்று காலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள்.
294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு இன்றும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த முதல்கட்ட தோ்தலில் மொத்த வாக்காளா்கள் 3.60 கோடி போ் (ஆண்கள் 1.84 கோடி, பெண்கள் 1.75 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 465). இவா்கள் வாக்களிக்க வசதியாக, 44,378 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமாா் 2.5 லட்சம் பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
Summary
The Election Commission of India has stated that 62.18 percent of votes have been recorded in the state of West Bengal as of 1:00 PM today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: 5 மணி வரை 89.99% வாக்குப்பதிவு!

மேற்கு வங்கம்: 3 மணி நிலவரம்!

மேற்கு வங்கம்: 1 மணி நிலவரப்படி 61.11% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

