மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 3:24 am IST

மேற்கு வங்கத்தின் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்.26 மற்றும் 27-ஆம் தேதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பிரசாரம் மேற்கொள்வாா் என அக்கட்சி வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜியின் அழைப்பின் பேரில், அரவிந்த் கேஜரிவால் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளாா்.

இது தொடா்பாக கேஜரிவால் புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மம்தா பானா்ஜி இந்திய ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான முக்கியமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா். அவருடன் தொலைப்பேசியில் புதன்கிழமை உரையாடியபோது எனது முழு ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்தேன் என குறிப்பிட்டிருந்தாா்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்.29-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.