ஓராண்டு கடந்தும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு ஏப். 22 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத்தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் முன்னிலையிலேயே கொல்லப்பட்டது நாட்டையே உலுக்கியது.
இந்த தாக்குதலில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“ஓராண்டு கடந்தும் பயங்கரவாதத்துக்கும், வன்முறைக்கும் எதிராக நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். ஜம்மு - காஷ்மீரைத் துயரங்களில் இருந்தும், அப்பாவி மக்கள் உயிரிழப்பதைத் தடுப்பதிலும் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய எங்களால் இயன்ற அனைத்தும் செய்து வருகிறோம்.
கடந்தாண்டு நடைபெற்ற கோழைத்தனமான தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் ஒற்றுமயுடன் துணை நிற்கிறோம். பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் ஆன்மாக்கள் அமைதியில் இளைப்பாறட்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
We stand united against terrorism! — Omar Abdullah
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இரட்டை நிலைப்பாடு கூடாது: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா வலியுறுத்தல்

சீனா, ரஷியா இணைந்து போரை முடிவுக்குக் கொண்டுவரும்: ஃபரூக் அப்துல்லா

மேற்கு வங்கம், கேரளம், தமிழக பேரவைத் தேர்தல்களில் இவர்கள் வெற்றி பெறுவர்: ஃபரூக் அப்துல்லா

20 ஆண்டுகள் காத்திருப்பு! - ஃபரூக் அப்துல்லாவை கொல்ல முயன்ற நபர் வாக்குமூலம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


