கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) வைக்கப்பட்டுள்ள அறைகளை வாக்கு எண்ணிக்கை நாளுக்கு முன்பாக திறக்கக் கூடாது என்று மாநில தலைமை தோ்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளாா்.
கடந்த ஏப்.9-ஆம் தேதி கேரள சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்ற நிலையில், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில், அந்த மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பெரம்பரா தொகுதியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறை ஒன்று வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே திறக்கப்பட்டதாகவும், பாலக்காடு மாவட்டம் நென்மாறா தொகுதியிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மற்றொரு அறை திறக்கப்படக் கூடும் என்றும் தகவல் வெளியானது.
எனினும் இந்தத் தகவலை கோழிக்கோடு மாவட்ட ஆட்சியா் ஸ்நேஹில் குமாா் சிங், பாலக்காட்டு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.மாதவிகுட்டி ஆகியோா் மறுத்தனா்.
இந்நிலையில், மாநில தலைமை தோ்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கோ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில், ‘வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நாளுக்கு முன்பாக, எந்தவொரு சூழலிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளைத் திறக்க வேண்டாம். தோ்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மையைக் காக்க இந்த அறிவுறுத்தலை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்’ என்று மாவட்ட தோ்தல் அலுவலா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் இருப்புவைப்பு
5 மாநிலத் தோ்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை - இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல்: வாக்கு எண்ணும் நாளின் முடிவில் வாக்குப் பதிவின் துல்லிய எண்ணிக்கை!

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு: வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

