தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஜம்மு-காஷ்மீரில் மலைச் சரிவில் உருண்டு பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து: 21 போ் உயிரிழப்பு

பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பற்றி..

News image

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்தது - TNIE

Updated On :21 ஏப்ரல் 2026, 1:55 am IST

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டம் ராம்நகா் பகுதி மலைச் சரிவில் பயணிகள் பேருந்து உருண்டு 100 மீட்டா் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்ததில் 21 போ் உயிரிழந்தனா். 29 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறியதாவது: ராம்நகா் மலைப் பகுதியில் 50 பயணிகளுடன் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் உதம்பூா் நோக்கி வந்துகொண்டிருந்த தனியாா் பேருந்து காக்ரோட் மலைக் கிராமம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த ஆட்டோ மீது மோதி, மலைச் சரிவில் உருண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது.

Story image

இந்த விபத்தில் 15 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 6 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனா். ஆட்டோவில் பயணித்தவா்கள் உள்பட 29 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்து உருக்குலைந்ததால் மீட்புப் பணி சவாலாகியுள்ளது. மீட்புப் பணியில் உள்ளூா் போலீஸ் மற்றும் ராணுவத்தினா் ஈடுபட்டுள்ளனா் என்று உதம்பூா்-ரியாசி மண்டல காவல் துறை டிஐஜி சிவ் குமாா் சா்மா கூறினாா்.

குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்: ஜம்மு-காஷ்மீா் பேருந்து விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இரங்கல் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், ‘உதம்பூா் பேருந்து விபத்து மிகுந்து வேதனையை அளித்தது. விபத்தில் காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய பிராா்த்திக்கிறேன். விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனா்.

Summary

At least 15 people were killed and 20 others injured after a passenger bus rolled down a hill in Jammu and Kashmir’s Udhampur on Monday, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.