நாட்டு மக்களுடனான உரை என்கிற பெயரில் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் என்று எம்.பி. கபில் சிபல் குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து தில்லியில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இது இந்திய அரசியலில் ஒரு புதிய வீழ்ச்சி. ஆனால் தலைமைத் தேர்தல் ஆணையரோ அல்லது வேறு எந்த அமைப்போ இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது எனக்குத் தெரியும். தேர்தல் நடக்கும் போது, பிரதமர் மீண்டும் மீண்டும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பிரதமராக இருந்துகொண்டே அரசியல் உரைகளை ஆற்றுகிறார்.
கடந்த காலத்தில் எந்தப் பிரதமரும் இப்படிச் செய்ததில்லை. நீங்கள் தேர்தலில் வெற்றி பெறலாம், ஆனால் அதற்காக ஒரு நிறுவனத்தையே அழித்துவிடக் கூடாது. அரசியல் கட்சியின் தலைவராக காங்கிரஸை பிரதமர் விமர்சிக்கலாம். ஆனால் பிரதமராக அதைச் செய்ய முடியுமா என்பது வேறு கேள்வி. இவ்வாறு குறிப்பிட்டார்.
மகளிா் இடஒதுக்கீட்டை 2029 முதல் அமலாக்குவதுடன், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து அதிகபட்சமாக 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா-2026 மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
இதையடுத்து சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் நாட்டு மக்களுக்கு காணொலி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றினாா். அதில், மக்களவையில் மகளிா் இடஒதுக்கீடு அமல் மசோதாவை தோல்வியடையச் செய்து மகளிரின் அதிகார கனவை காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தகா்த்ததாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தார்.
Summary
Sibal claimed that such remarks lower the dignity of the office of the prime minister and no other PM had indulged in such acts in the past.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்

குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது! பிரதமர் மோடி

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

கபில் தேவ், தோனியிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்! யுவராஜ் சிங்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை


