புது தில்லி: தமிழ்நாட்டில் தனிப் பெருங்கட்சியாக வெற்றி பெற்ற தவெகவை, ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மூத்த வழக்குரைஞருமான கிபில் சிபில் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கபில் சிபல், செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தனிப்பெருங்கட்சியான தவெகவை ஆளுநர் அழைத்திருக்க வேண்டும். தேர்தலுக்குப் பின் பெரும்பான்மை பெற்ற கட்சியாக எந்த ஒரு கட்சியும் உருவாகாத நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ள தவெகவை ஆட்சியமைக்க அழைத்திருக்க வேண்டும்.
ஆளுநரிடம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. தனிப்பெரும் கட்சி தவெக தான். மக்கள் தவெகவுக்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள். அதுபோல அடுத்த இடத்தில் இருக்கும் திமுக மற்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க விரும்பவில்லை.
பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்ல ஆளுநர் யார்? பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டியது சட்டப்பேரவையில்தான். ஆளுநருக்கு சட்டம் தெரியும் என்று நினைத்தேன். அவரும் பாஜக ஏஜெண்ட் போல செயல்படுகிறார்.
சட்டப்படி நடக்க ஆளுநர் விரும்பவில்லை என்றால், அதனை நீதிமன்றத்தின் மூலம் தவெக நடத்திக் காட்டலாம். சட்ட நிவாரணம் கோரி தவெக எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்தை அணுகலாம்.
Summary
Kapil Sibal said that the Governor should have invited TVK to form the government.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெகவை ஆதரிக்காமல் இருந்திருந்தால் பதவியேற்பு விழாவே நடந்திருக்காது! பெ. சண்முகம்
'வெற்றித் தமிழகம்' என்ற பெயரில் தொலைநோக்குத் திட்டங்கள்! ஆளுநர் உரை

ஆளுநர் மாளிகையில் விஜய்!

ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநருக்கு தவெக கடிதம்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


