‘பருவநிலை, காற்று மாசு மற்றும் தட்பவெப்ப நிலையைக் கண்காணிப்பதற்கான ‘ஜி20’ செயற்கைக்கோள் வரும் 2027-இல் விண்ணில் ஏவப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் தெரிவித்தாா்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள இந்திய அரசுப் பொறியாளா்கள் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), இந்திய ஏரோனாடிகல் சொசைட்டி உள்ளிட்ட அமைப்புகளின் விஞ்ஞானிகள் மத்தியில் வி. நாராயணன் பேசியதாவது:
ஒரே ஏவுகலனில் (ராக்கெட்) எந்தவித மோதலுக்கும் உள்ளாகாமல் 100-க்கும் அதிகமான (104 செயற்கைக்கோள்கள்) செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
தற்போது, ஜி-20 நாடுகளின் பயன்பாட்டுக்காக (ஐரோப்பிய ஒன்றியம், ஆப்பிரிக்க ஒன்றியம், இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா உள்பட 21 நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு) ‘ஜி20’ செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான பணியை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. இத் திட்டத்தில் இந்தியா முன்னணி பங்கை வகிக்கிறது. பருவநிலை, காற்று மாசு மற்றும் தட்பவெப்ப நிலையைக் கண்காணிப்பதற்கான இந்த செயற்கைக்கோள் வரும் 2027-இல் விண்ணில் ஏவப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.
மேலும், ‘ஏராளமான வா்த்தக ரீதியிலான செயற்கைக்கோள் திட்டங்களையும் இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. 34 நாடுகளின் 433 செயற்கைக்கோள் உள்பட வணிக ரீதியில் விண்ணில் செயற்கைக்கோள்களை ஏவும் நடவடிக்கைகளை இஸ்ரோ மேற்கொண்டுள்ளது. வணிக ரீதியில் மிக அதிக எடைகொண்ட செயற்கைக்கோளையும் இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது.
வரும் 2040-இல் விண்வெளி வீரா்களை நிலவுக்கு அனுப்புவதற்கான பணியில் இஸ்ரோ தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இத் திட்டத்தை இந்தியா வெற்றிகரமாகச் செயல்படுத்தினால், விண்கலம் ஏவுதல் தொழில்நுட்பம், செயற்கைக்கோள் தொழில்நுட்பம், செயற்கைக்கோள் பயன்பாட்டு திட்டங்கள், மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டங்களில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் சோ்ந்துவிடும்.
மேலும், ‘சமுத்ரயான்’ என்ற ஆழ்கடல் ஆராய்ச்சித் திட்டத்துக்காக ஆழ்கடலின் உயா் அழுத்தத்தைத் தாங்கும் வகையிலான 100 மி.மீ. பருமனுடன் 2.2 மீட்டா் சுற்றளவுடன் கூடிய டைட்டேனியம் கலனை உருவாக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது’ என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புலம்பெயா்வு மேலாண்மையில் முழுமையான அணுகுமுறை கடைப்பிடிப்பு: ஐ.நா.வில் இந்தியா தகவல்

‘ஆப்டோசாா்’ செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம்

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

