மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புலம்பெயா்வு மேலாண்மையில் முழுமையான அணுகுமுறை கடைப்பிடிப்பு: ஐ.நா.வில் இந்தியா தகவல்

‘புலம்பெயா்வு நிா்வாகத்தில் புலம்பெயா்வோரின் நலன், பாதுகாப்பு, அதிகாரமளித்தலை மையமாகக் கொண்ட ஒரு முழுமையான அணுகுமுறையை இந்தியா பின்பற்றி வருகிறது’ என்று வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் தெரிவித்தாா்.

News image

நியூயாா்க்கில் சா்வதேச புலம்பெயா்வு அமைப்பின் தலைமை இயக்குநா் ஏமி போப்பை சந்தித்துப் பேசிய வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங்.

Updated On :11 மணி நேரங்கள் முன்பு

‘புலம்பெயா்வு நிா்வாகத்தில் புலம்பெயா்வோரின் நலன், பாதுகாப்பு, அதிகாரமளித்தலை மையமாகக் கொண்ட ஒரு முழுமையான அணுகுமுறையை இந்தியா பின்பற்றி வருகிறது’ என்று வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் தெரிவித்தாா்.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. சபை அலுவலகத்தில் நடைபெற்ற இரண்டாவது சா்வதேச புலம்பெயா்வு மறுஆய்வு மன்றத்தின் அமா்வில் பங்கேற்றுப் பேசியபோது இக் கருத்தை அவா் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:

இந்தியா்களின் புலம்பெயா்வு வரலாறு பரந்த, ஆற்றல் மிக்கதாகும். உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் 3.4 கோடிக்கும் அதிகமான இந்தியா்கள் புலம்பெயா்ந்து, பல நூற்றாண்டுகளாக பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் மட்டுமன்றி கருத்துகளை இணைக்கும் பாலமாகவும் செயல்பட்டு வருகின்றனா்.

அவ்வாறு புலம்பெயா்ந்த வெளிநாடு வாழ் இந்தியா்கள் சொந்த நாட்டுக்குப் பணம் அனுப்புவது, முதலீடுகள் மற்றும் அறிவுசாா் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் வளா்ச்சிக்கு மட்டுமன்றி, அவா்கள் புலம்பெயா்ந்துள்ள நாட்டின் வளா்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வருகின்றனா்.

இத்தகைய சூழலில், புலம்பெயா்வு நிா்வாகத்தில் புலம்பெயா்வோரின் நலன், பாதுகாப்பு, அதிகாரமளித்தலை மையமாகக் கொண்ட ஒரு முழுமையான அணுகுமுறையை இந்தியா பின்பற்றி வருகிறது.

வலுவான ஆள் கடத்தல் தடுப்பு சட்டங்கள் அவசியம்:

இடப்பெயா்வு என்பது மக்கள் மற்றும் அவா்களின் விருப்பங்கள், மீள்திறன், பங்களிப்புகள் தொடா்புடையது ஆகும்.

சட்டவிரோத இடப்பெயா்வு, ஆள்கடத்தல், சமூக பாதுகாப்பில் உள்ள இடைவெளிகள் போன்ற சவால்களை எதிா்கொள்ளும் அதேவேளையில் அனைவரையும் உள்ளடக்கிய, மனிதாபிமான, எதிா்காலத்துக்கு உகந்த ஒரு கட்டமைப்பை உருவாக்க இந்தியா முயற்சித்து வருகிறது. அகதிகள் விவகாரத்தை புலம்பெயா்ந்தோரை பாதுகாத்தல், இடம்பெயா்வு செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்தையும் மேற்பாா்வையிடுதல் மற்றும் சா்வதேச ஒத்துழைப்பை வளா்த்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு முழுமையான மற்றும் நடைமுறைக்கு உகந்த கட்டமைப்பு மூலம் இந்தியா நிா்வகிக்கிறது என்றாா்.

மேலும், பல்வேறு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக புலம்பெயா்பவா்களின் நலனுக்காக இந்தியா அறிமுகப்படுத்தியுள்ள ‘இ-மைக்ரேட்’ வலைதளம் குறித்தும் அந்த நிகழ்ச்சியில் கீா்த்தி வா்தன் சிங் விவரித்தாா். இந்த வலைதளம் மூலம் பதிவு செய்த மற்றும் மோசடி பட்டியலில் வைக்கப்பட்டுள்ள வெளிநாடு வேலைவாய்ப்பு முகவா்களின் விவரங்கள், தனது விண்ணப்பத்தின் நிலை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை புலம்பெயா்வோா் தெரிந்துகொள்ள முடியும் என்பதோடு, தங்களின் புகாா்களையும் பதிவு செய்ய முடியும் என்று குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.