மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தன்னுடைய வளர்ப்பு நாய்க்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுப்பதாக சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
மக்களவையில் வெள்ளிக்கிழமையில் (ஏப். 17) தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள், எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது.
முன்னதாக, மசோதா விவாதத்தின்போது, அவையில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்று கடந்த புதன்கிழமையிலேயே (ஏப். 15) காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸின் சரத்பவார், சுப்ரியா சுலே, சிவசேனையின் (உத்தவ்) சஞ்சய் ராவத், திமுகவின் டி.ஆர். பாலு, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், கபில் சிபல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே, ராகுல் காந்தியின் வளர்ப்பு நாய் ’பிடி’யையும் தன்னுடன் அழைத்து வந்திருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் பங்கேற்றிருந்தாலும், அவரது முழு கவனமும் வீட்டின் வெளியே புல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த பிடியின் மீதே இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பிடியை உள்ளே அழைத்துவர ராகுல் முற்பட்டபோது, ஆலோசனைக் கூட்டத்தில் நாய் எதற்கு? என்று உள்ளிருந்த சிலர் கூறியவுடன், ராகுல் வெளியே சென்று நாயுடன் விளையாடியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராகுலின் இந்தச் செயல்பாடு, சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, முன்னரே ராகுல் காந்தி மற்றும் அவரது வளர்ப்பு நாய் பிடியையும் பாஜக மூத்த தலைவரும் அஸ்ஸாம் முதல்வருமான ஹிமந்த பிஸ்வா விமர்சித்திருந்தார்.
காங்கிரஸ் தலைவர்களைவிட, வளர்ப்பு நாய்க்கே ராகுல் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், மீதமான பிஸ்கட்டுகளையே காங்கிரஸ் தலைவர்கள் சாப்பிட வேண்டியிருந்ததாகவும் கடுமையாக ஹிமந்த பிஸ்வா சர்மா விமர்சித்திருந்தார்.
Summary
Does Congress Leader Rahul Gandhi give more importance to his pet dog than to opposition leaders?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்!
டிரம்ப்புக்கு மோடி; அதுபோல தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு கூட்டாளி முதல்வர் தேவை! ராகுல் பேச்சு
தமிழகம் வந்தார் ராகுல் காந்தி!

'16' புதிருக்கான விடையை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமாட்டேன்! ராகுல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

