ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்துள்ள புகாரையடுத்து, இவ்விவகாரத்தில் ஈரான் தூதருக்கு சம்மன் அனுப்பப்படவிருப்பதாக வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்காகத் திறக்கப்படுவதாக அறிவித்த ஈரான், அமெரிக்க கடற்படையால் ஈரானிய துறைமுகங்கள் முற்றுகையிடப்படும் நடவடிக்கைக்கு எதிர்வினையாக ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு மீண்டும் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் உலகளாவிய சரக்கு போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
இதனிடையே, இராக்கிலிருந்து 20 லட்சம் பாரல் எண்ணெயுடன் ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில் தாயகம் திரும்பிக்கொண்டிருந்த இரு இந்திய சரக்கு கப்பல்களைக் குறிவைத்து ஈரானிய புரட்சிகர காவல்படை தாக்குதல் நடத்தியிருப்பதாக கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் முகமை ஒன்று உறுதிப்படுத்தியது. தாக்குதல் எதிரொலியாக அவ்விரு இந்தியக் கப்பல்களும் திருப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இவ்விவகாரத்தில் விளக்கம் கேட்டு ஈரான் தூதருக்கு சம்மன் அனுப்பப்படவிருப்பதாக வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
Summary
MEA to summon Iranian Ambassador over shooting at Indian vessels in Strait of Hormuz.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால்..! - ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணை திறக்க ஈரான் விருப்பம்: டிரம்ப் பேச்சு

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

