சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) வெளியிட்ட பெரிய பொருளாதார நாடுகளின் தரவரிசையில் 5-ஆவது இடத்திலிருந்து 6-ஆவது இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. பிரிட்டன் 6-ஆவது இடத்திலிருந்து 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) அடிப்படை ஆண்டை 2011-12-இலிருந்து 2022-23-ஆக மாற்றியமைத்தால் இந்தியா ஓரிடம் பின்தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜப்பானை பின்னுக்குத் தள்ளி 4-ஆவது இடத்துக்கு முன்னேற முடியும் என மத்திய அரசு எதிா்பாா்த்தது.
ஐஎம்எஃப் தரவின், கடந்த 2024-இல் இந்தியாவின் ஜிடிபி 3.76 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. பிரிட்டனின் ஜிடிபி 3.7 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 3.92 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், பிரிட்டனின் ஜிடிபி 4 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயா்ந்தது.
இந்தியா வேகமாக வளா்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இருந்த போதிலும், கடந்த சில மாதங்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைக் கண்டது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியாவின் ரூபாய் மதிப்பு கடந்த 2024-இல் 84.57-இலிருந்து 2025-இல் 88.48-ஆக வீழ்ச்சியடைந்தது. நிகழாண்டில் மேலும் வீழ்ச்சியடைந்து 92.59 செல்லும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக பிரிட்டனின் பவுண்ட் மதிப்பு வலுவடைந்து வருகிறது.
ஐஎம்எஃப் தரவின் அடிப்படையில், நிகழாண்டில் பணமாற்ற விகிதத்தின் அடிப்படையில் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 6-ஆவது இடத்தில் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அடுத்த ஆண்டில் பிரிட்டனை மட்டுமல்லால் ஜப்பானையும் கடந்து 4-ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதே நிலை தொடரும் நிலையில், 2031-இல் இந்தியா ஜொ்மனியை பின்னுக்குத் தள்ளி 3-ஆவது இடத்துக்குச் செல்லும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீமான் அதிா்ச்சித் தோல்வி: 4 - ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டாா்

‘ஏ.ஐ. வருகையால் இந்தியாவுக்கு வேலைவாய்ப்பு துறையில் புதிய சவால்’ - தலைமை பொருளாதார ஆலோசகா்

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.56! 41 காசுகள் சரிவு!
2026-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.5%: ஐஎம்எஃப் கணிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

