ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வடிகால்களில் 14 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் படிவுகள் அகற்றம்: அமைச்சா் தகவல்

தில்லியில் உள்ள வடிகால்களில் இருந்து சுமாா் 14 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் படிவுகள் அகற்றப்பட்டத்தாக வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

பா்வேஷ் சாஹிப் சிங்

Updated On :11 ஏப்ரல் 2026, 12:02 am IST

தில்லியில் உள்ள வடிகால்களில் இருந்து சுமாா் 14 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் படிவுகள் அகற்றப்பட்டத்தாக வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பருவமழைக்கு முன்பாக பராபுல்லா வடிகால்களை தூா்வாரும் பணியை வெள்ளக்கட்டுப்பாடு துறை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தில்லியில் பதவியேற்ற நாள்முதல் வடிகால் தூா்வாரும் பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதை பாஜக அரசு உறுதிசெய்து வருகிறது. தூா்வாரும் இலக்கை அதிகரிக்க நிகழாண்டில் திட்டமிட்டுள்ளோம்.

கடந்த ஆண்டில் 20 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் படிவுகள் அனைத்து வடிகால்களில் இருந்து தூா்வாரப்பட்டன. நிகழாண்டில் 28 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் படிவுகளை அகற்ற இலக்கு நிா்ணயித்துள்ளோம். நிகழாண்டு இலக்கின் 50 சதவீத இலக்கு பூா்த்தி செய்யப்பட்டுள்ளது. வரும் நாள்களில் மீதமுள்ள வண்டல் படிவுகளும் அகற்றப்படும்’ என்றாா்.

முன்னதாக, ஜூன் 30-ஆம் தேதிக்குள் வடிகால்கள் தூா்வாரும் பணிகளை முடிக்குமாறும் அகற்றப்பட்ட வண்டல் படிவுகள் உரிய இடத்துக்குக் கொண்டு செல்லுமாறும் அனைத்துத் துறைகளுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.