அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார்.
722 வேட்பாளர்களின் தேர்தல் விதியைத் தீர்மானிக்கும், அஸ்ஸாமின் 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், பாஜக தலைமையிலான அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஜலுக்பாரி தொகுதியில் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் தீர்க்கமான ஆணையை வழங்குவார்கள் என உறுதி தெரிவித்தார்.
கராள் புனியாதி தொடக்கப் பள்ளியில் வாக்களித்த முதல்வர் ஹிமந்தவுடன் அவரது மனைவி ரினிகி புயான் சர்மா மற்றும் அவரது குழந்தைகள் உடனிருந்தனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியை வழிநடத்தும் முதல்வர் சர்மா 2001 ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் ஜலுக்பாரி தொகுதியில் இம்முறை போட்டியிடுகிறார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முயன்று வருகிறது.
வாக்களிப்பதற்கு முன்னதாக, அவர் காமாக்யா தேவி மற்றும் தௌல் கோவிந்தா ஆகிய கோயில்களுக்குச் சென்று சிறப்புப் பிரார்த்தனை மேற்கொண்டார்.
வாக்களித்துப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வாக்காளராக எனது கடமையை நான் நிறைவேற்றிவிட்டேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தொடர் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும்.
மக்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரு தீர்க்கமான மக்கள் ஆணையை வழங்குவார்கள். மாநிலத்தின் பல பகுதிகளில் காலையில் பெய்த மழை ஓய்ந்து வானம் தெளிவடைந்திருப்பதால், இம்முறை வாக்களிக்கும் மக்களின் எண்ணிக்கை சிறப்பாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Summary
Assam Chief Minister Himanta Biswa Sarma cast his vote for the Assembly polls on Thursday and asserted that people will give a decisive mandate to the BJP-led NDA.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஸ்ஸாமின் புதிய பாஜக முதல்வர் யார்? மே 10-ல் தேர்வு!

முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ராஜிநாமா!

தொடர்ந்து 6-வது முறை.. ஜலுக்பரியில் ஹிமந்த அமோக வெற்றி!

ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் தவறாமல் வாக்களிக்கவும்: ஹிமந்த பிஸ்வ சர்மா!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


