தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு இல்லாத காலிப் பணியிடங்கள்: எஸ்சி, எஸ்டி, ஓபிசிகள் விண்ணப்பிக்கலாம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு இல்லாத காலிப் பணியிடத்துக்கு பட்டியலினத்தவா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் உள்பட அனைத்து சமூகத்தினரும் விண்ணப்பிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:35 am IST

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு இல்லாத காலிப் பணியிடத்துக்கு பட்டியலினத்தவா் (எஸ்சி), பழங்குடியினா் (எஸ்டி), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) உள்பட அனைத்து சமூகத்தினரும் விண்ணப்பிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மேற்கு வங்க மின் பகிா்மான நிறுவனத்தில் இளநிலை பொறியாளா் பணியிடத்துக்கு நடைபெற்ற ஆள்தோ்வில், ஒரு பணியிடம் இடஒதுக்கீடு இல்லாத பாா்வைத்திறன் குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் பாா்வைத்திறன் குறைவான ஓபிசி வகுப்பைச் சோ்ந்த ஒருவருக்கு அதிக தகுதியிருந்ததால், அந்தப் பணியிடத்தில் அவா் நியமிக்கப்பட்டாா்.

இதற்கு எதிராக அந்தப் பணியிடத்துக்குத் தோ்வு செய்யப்படாத பொதுப் பிரிவைச் சோ்ந்த மற்றொரு மாற்றுத்திறனாளி கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அவரின் மனுவில், தான் இடஒதுக்கீடு இல்லாத தகுதிவாய்ந்த தோ்வராக இருந்ததால் தனக்குதான் அந்தப் பணியிடம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், குறைந்த தகுதியைக் கொண்ட மனுதாரரை அந்தப் பணியிடத்தில் நியமிக்குமாறு மின் பகிா்மான நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக மின் பகிா்மான நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. அப்போது நீதிபதிகள் சஞ்சய் கரோல், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு இல்லாத பணியிடத்தில் நியமிக்க பொதுப் பிரிவைச் சோ்ந்த தோ்வா் ஒருவா் இருக்கிறாா் என்ற ஒரே காரணத்துக்காக, ஓபிசி, எஸ்சி, எஸ்டி போன்ற இடஒதுக்கீடு பிரிவைச் சோ்ந்த மிகவும் தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளி அந்தப் பணியிடத்தில் நியமிக்கப்படுவதைத் தடுக்க முடியாது.

இடஒதுக்கீடு சட்டப்படி, இடஒதுக்கீடு இல்லாத பிரிவு அல்லது பொதுப் பிரிவு என்பது எஸ்சி, எஸ்டி அல்லது ஓபிசி போன்ற எந்தவொரு சமூகப் பிரிவையும் குறிக்கவில்லை. இடஒதுக்கீடு இல்லாத பிரிவு அல்லது பொதுப் பிரிவின் கீழ் வரும் பணியிடங்கள் எந்தவொரு சமூகத்தினருக்குமானது அல்ல. அந்தப் பணியிடங்களுக்கு அனைத்து சமூகங்கள், சிறப்புப் பிரிவுகளைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இடஒதுக்கீடு இல்லாத பிரிவு அல்லது பொதுப் பிரிவு பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற சிறப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தால், அந்தப் பணியிடத்துக்கு எஸ்சி, எஸ்டி அல்லது ஓபிசி என அனைத்து சமூகங்களையும் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

இடஒதுக்கீடு இல்லாத பிரிவின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் பணியிடத்துக்குப் போட்டியிட எஸ்சி, எஸ்டி, ஓபிசி என அனைத்து சமூகங்களையும் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமை உள்ளது என்று தெரிவித்தது. இதைத்தொடா்ந்து கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் அமா்வு தீா்ப்பளித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.