1975 இல் மூன்று நீர்மின் திட்டங்களுடன் தொடங்கப்பட்ட என்எச்பிசி, காலப்போக்கில் வளர்ந்து இன்று நீர்மின் சக்தித் துறையில் ஒரு முதன்மையான பொதுத்துறை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
நீர் மின் உற்பத்தி நிறுவனமான என்எச்பிசி், இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் நீர்மின் சக்தி மேம்பாட்டுத் துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. 'நவரத்னா' அந்தஸ்தையும் பெற்றுத் திகழும் இந்த நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 72 பயிற்சி பொறியாளர் பணிக்கான எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். NH/Rectt.02/2026
பணி: Trainee Engineer
காலியிடங்கள்: 72
துறைவாரியான பணியிடங்கள் விவரங்கள்:
பிரிவு: Civil
காலியிடங்கள்: 11
பிரிவு: Electrical
காலியிடங்கள்: 35
பிரிவு: Mechenical
காலியிடங்கள்: 26
தகுதி: பொறியில் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் கேட் - 2025, கேட்-2025 தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
வயதுவரம்பு: 6.4.2025 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ஓபிசி பிரிவினருக்கு ரூ.800. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர், பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.nhpcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.4.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
NHPC Limited Special Recruitment for SC,ST,OBC,PwBD Candidates for the post of Trainee Engineer
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்பாக்கம் அணுமின் கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி: காலியிடங்கள்: 158

யுஜிசி-நெட் தோ்வுக்கு பயிற்சி முகாம்: சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு

அரசுப் பணியாளர்களுக்கான உச்ச வயது வரம்பு உயர்வு!

ரூபாய் நோட்டு அச்சகம்-நாணயம் உற்பத்திக் கழகத்தில் வேலை வேண்டுமா?
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |
தினமணி செய்திச் சேவை

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்
தினமணி செய்திச் சேவை

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK
தினமணி செய்திச் சேவை


