மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராய்பூரில் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆப்டெல் லிமிடெட்டில் காலியாக உள்ள இளநிலை திட்ட பொறியாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். IOL Hqrs/100(2)/2026-Rectt.
பணி: Junior Project Engineer
மொத்த காலியிடங்கள்: 77
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Chemical - 1
தகுதி: வேதியியல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதல் வகுப்பு இளங்கலைப் பட்டம் மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Electrical - 6
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 3 ஆண்டு டிப்பளமோ முடித்திருப்பதுன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Electronics - 26
தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன், இன்டுஸ்ரியல் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ருமென்டேஷன் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. Mechanical - 37
தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், மெக்கட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. Optics & Coating - 7
தகுதி: வேதியியல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதல் வகுப்பு இளங்கலைப் பட்டம் மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
வயதுவரம்பு: 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஒபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://ddpdoc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்றெப்பம் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும். அஞ்சல் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chairman & Managing Director, India Optel Limited, OFILDD Campus, Raipur, Dehradun, Uttrakhand, PIN: 248 008
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 3.4.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
IOL Recruitment for JUNIOR PROJECT ENGINEERS ON FIXED TERM CONTRACT BASIS
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாதம் ரூ1,66,050 சம்பளத்தில் தில்லி ஐஐடி-ல் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? அணுசக்தி கழக மருத்துவமனையில் பாராமெடிக்கல் பணிகள்!

தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

நபார்டு வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் பணிகள்: உடனே விண்ணப்பிக்கவும்!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |
தினமணி செய்திச் சேவை

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்
தினமணி செய்திச் சேவை

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK
தினமணி செய்திச் சேவை


