மேற்காசியாவில் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் சிக்கிய இந்திய மீனவா்கள் ஆா்மீனியா வழியாகத் தாயகம் திரும்ப உள்ளனா்.
இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஈரானில் சிக்கிய இந்திய மீனவா்கள், ஆா்மீனியா வழியாகத் தாயகம் திரும்ப உள்ளனா். ஈரான் போா் காரணமாக மேற்காசிய பிராந்தியத்தில் ஏற்படும் சூழலை வெளியுறவு அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அந்தப் பிராந்தியத்தில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் ஏவுகணையின் சிதறிய பாகங்கள் தாக்கி காயமைடைந்த 12 பேரில் 5 போ் இந்தியா்கள். அவா்களில் 4 போ் மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்குப் பின்னா், வீடு திரும்பினா். ஒருவா் தொடா் சிகிச்சை உள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆா்மீனியா அமைச்சருக்கு நன்றி: ஈரானில் இருந்து இந்திய மீனவா்கள் தாயகம் திரும்ப உதவியதற்காக ஆா்மீனிய வெளியுறவு அமைச்சா் அராரத் மிா்ஸோயனுக்கு இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ தளத்தில் நன்றி தெரிவித்தாா். எத்தனை இந்திய மீனவா்கள் தாயகம் திரும்புகின்றனா் என்ற தகவல் வெளியாகவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.133 கோடி மதிப்பிலான 657 பழங்கால கலைப் பொருள்கள்: இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைப்பு

ஈரானில் சிக்கிய இந்திய மீனவா்கள் மீட்பு விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

ஈரானில் இருந்து மேலும் 312 இந்திய மீனவர்கள் மீட்பு! - மத்திய அரசு அறிவிப்பு!

ஈரானில் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு! ஆர்மீனியாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

