ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தில்லியில் சிலிண்டர் கடத்தல்: 3 பேர் கைது! 45 சிலிண்டர்கள் பறிமுதல்!

தில்லியில் சட்டவிரோதமாக சிலிண்டர் விநியோகித்த கும்பல் சிக்கியதில் 3 பேர் கைது செய்யப்பட்டு, 45 சிலிண்டர்கள் பறிமுதல் செய்தது தொடர்பாக...

News image

எரிவாயு சிலிண்டர்கள் - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 4:55 pm IST

தில்லியின் பாலம் பகுதியில் சட்டவிரோதமாக சிலிண்டர் விநியோகித்த கும்பல் சிக்கியதில் 3 பேர் கைது செய்யப்பட்டு, 45 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாலம் என்ற குடியிருப்புப் பகுதியில், எந்தவொரு பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல், குழாய்கள் மற்றும் எடை இயந்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு சிலிண்டரிலிருந்து மற்றொரு சிலிண்டருக்கு எரிவாயு சட்டவிரோதமாக மாற்றப்பட்டு அதனை விநியோகம் செய்து வருவதைக் காவல்துறையினர் கண்டறிந்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்தனர். விசாரித்ததில் இக்குற்ற சம்பவத்துக்கு காரணமாக இருந்தவர்கள் அனார் சிங், சத்யாவீர் மற்றும் விகாஸ் குமாரி என தெரிய வந்தது.

உடனடியாக அவர்களைக் கைது செய்ததோடு, 45 வீட்டு உபயோக சிலிண்டர்கள், 3 எரிவாயு பரிமாற்ற குழாய்கள் மற்றும் 1 டெம்போ வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், சிலிண்டர்களைச் சேமித்து வைப்பதற்கோ அல்லது மீண்டும் நிரப்புவதற்கோ உரிய எந்தவொரு உரிமமோ அல்லது அங்கீகாரமோ குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்காசிய போர் காரணமாக இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சூழலில் இதுமாதிரியான சட்டவிரோத நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

A gang illegally distributing gas cylinders was busted in Delhi's Palam area; three individuals were arrested, and 45 cylinders were seized.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.