மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வருகிற ஏப். 8 ஆம் தேதி பவானிபூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில், 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 29 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தொடர்ந்து 4 ஆவது முறையாக ஆட்சியமைக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதாவும் அதேநேரத்தில் முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தலைவர்களும் முனைப்பு காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் 152 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30 தொடங்கி ஏப். 6 வரை நடைபெறுகிறது. இதில் நந்திகிராம் தொகுதியில் மாநில எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு இரண்டாம் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி ஏப். 8 ஆம் தேதி பவானிபூர் தொகுதியில் மமதா வேட்புமனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது. அதே தொகுதியில் சுவேந்து அதிகாரி ஏப். 2 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
கடந்த முறை நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு சுவேந்து அதிகாரியிடம் மமதா தோல்வியைத் தோல்விய நிலையில் இம்முறை மமதா பவானிபூர் தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார்.
அதேநேரத்தில் சுவேந்து அதிகாரி நந்திகிராம், பவானிபூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.
இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப். 2 தொடங்கி ஏப். 9 வரை நடைபெறுகிறது. ஏப். 10 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஏப். 13 வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம்.
Mamata Likely To File Nomination From Bhabanipur On April 8
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மமதா பானர்ஜி தோல்வி! சுவேந்து அதிகாரி வெற்றி!
மேற்கு வங்கம்: பாஜக - 177, திரிணமூல் - 107; பவானிபூரில் மமதா மீண்டும் முன்னிலை!

மமதா தோல்வி அடையப்போகும் விரக்தியில் உள்ளார்: சுவேந்து அதிகாரி

பவானிபூரில் முதல்வர் மமதா சாலைவலம்; பொதுமக்களுடனும் கலந்துரையாடல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

