மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

26.10.1976: அரசியல் சட்ட திருத்த மசோதா பரிசீலனையை ஒத்திவைக்க ராஷ்டிரபதிக்கு வேண்டுகோள்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

26.10.1976 - Dinamani

Published On :26 அக்டோபர் 2026, 4:23 am IST

புதுடில்லி, அக். 25 - 44வது அரசியல் சட்ட திருத்த மசோதாவின் பரிசீலனையை ஒத்திவைக்குமாறு ராஷ்டிரபதிக்கும், பிரதம மந்திரிக்கும் லோக சபை சபாநாயகருக்கும் 300க்கும் அதிகமான எழுத்தாளர்கள், நீதித்துறை நிபுணர்கள் சர்வகலாசாலை ஆசிரியர்கள் ஆகியோர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

வேண்டுகோளில் கையெழுத்திட்டிருப்பவர்களில் முக்கியமானவர்கள் வருமாறு: முன்னாள் மத்ய மந்திரி எம். சி. சாக்ளா, முன்னாள் இந்திய தலைமை நீதிபதி எம். இதயதுல்லா, பிரபல எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த், முன்னாள் அட்டர்னி ஜெனரல் சி. கே. தப்தாரி, சிற்ப கலைஞர் சார்லஸ் கொரியா, வரலாற்று ஆசிரியர் டாக்டர் எஸ். கோபால், எழுத்தாளர் ஜெனீந்திரகுமார், சொலிஸிடர் சோலி சோரப்ஜி, சமூக ஊழியர் பியரி லால் நய்யார், டில்லி சர்வகலா சாலையைச் சேர்ந்த அநேக ஆசிரியர்களும், ஜவஹர்லால் சர்வகலாசாலை ஆசிரியர்களும் சில பத்திரிகையாளர்களும் வேண்டுகோளில் கையெழுத்திட்டிருக்கின்றனர்.

அரசியல் சட்டத்தில் இத்தகைய மாறுதல்களை செய்வதற்கு தற்போதைய பார்லிமெண்டுக்கு அரசியல் அதிகாரமோ அன்றி தார்மிக அதிகாரமோ இல்லை என்று நாங்கள் ஏகமனதாகவும் உறுதியாகவும் கருதுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். தற்போதைய பார்லிமெண்டில் 5 வருட பதவி காலம் ஏற்கனவே முடிந்துவிட்டதை அவர்கள் எடுத்துக் காட்டினர்.

அவர்களது வேண்டுகோள் அடங்கிய மனு இன்று காலை ராஷ்டிரபதி, உப ராஷ்டிரபதி, பிரதம மந்திரி, லோக சபை சபாநாயகர் ஆகியோரின் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டன.

அரசியலமைப்பு திருத்த மசோதா பரிசீலனை ஆரம்பம்

புது டில்லி, அக். 25 - 59 ஷரத்துக்கள் கொண்ட அரசியலமைப்பு 44 வது திருத்த மசோதா மீது இன்று லோக சபையின் விசேஷக் கூட்டத் தொடரில் விவாதம் ஆரம்பமாயிற்று.

மசோதா குறித்து பேசிய சட்ட அமைச்சர் எச். ஆர். கோகலே இம்மசோதா அரசியலமைப்பைத் திருத்த பார்லிமெண்டுக்கு உள்ள அதிகாரத்தை அழுத்தந்திருத்தமாக ஊர்ஜிதம் செய்வதாகச் சொன்னார்.

பொது ஜனக் கருத்தறிய மசோதாவை சுற்றுக்கு விட வேண்டும் என்று கோரி சுயேச்சை அங்கத்தினர் ஒருவரும், பார்லிமெண்டின் இரு சபைகளைச் சேர்ந்த அங்கத்தினர்களடங்கிய ஒரு தனிக் கமிட்டியிட விடக் கோரி காங்கிரஸ் அங்கத்தினர் ஒருவரும் திருத்தங்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

நாட்டின் சமூக, பொருளாதாரப் புரட்சி லட்சியங்களை அடைவதை நோக்கி அரசியலமைப்புத் திருத்த மசோதா ஒரு முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும் என்று கூறினார்.

பார்லிமெண்டு தான் உயர்த்தது என்பதை வலியுறுத்துவதும், சில அடிப்படை உரிமைகளை விட கட்டளைக் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் 59 ஷாத்துக்கள் கொண்ட இம்மசோதாவின் முக்கிய நோக்கமாகும் என்று கோகலே கூறினார்.

இம்மசோதாவின் ஷரத்துக்கள் நீதித்துறையின் சுதந்திரம் கண்ணியத்தையோ அல்லது நாட்டின் சமஷ்டி அமைப்பையோ பாதிக்கவில்லை என்று கோகலே கூறினார். ...

Summary

Request to the President to postpone consideration of the Constitution Amendment Bill

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.