ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

7.4.1976: காந்திஜி கொலை சதி தகவல் - 3 போலீஸ் அதிகாரிகளுக்கு முன்னதாகத் தெரியுமாம்

காந்திஜி கொலை சதி தகவல் 3 போலீஸ் அதிகாரிகளுக்கு முன்னதாகத் தெரிந்தது பற்றி...

News image

7.4.1976 - DNS

Updated On :7 ஏப்ரல் 2026, 4:03 am IST

புனா, ஏப்: 6 - 1948 ஜன 31க்குப் பின்னர் மகாத்மா காந்தியை கொலை செய்வது என்ற சதி குறித்து மூன்று உயர் போலீஸ் அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்ததாக நேற்று இங்கு கோர்ட் விசாரணையின்போது அதிகாரப்பபூர்வமான ஒப்புதல் வந்தது.

ஜூடிஷியல் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஜி. வி. கேட்கர் வழக்கு விசாரணையின்போது புலன் விசாரணை அதிகாரி மட் பித்ரி தொடர்ந்து குறுக்கு விசாரணை செய்யப்பட்டார். டில்லியில் அதுசமயம் போலீஸ் ஐ.ஜி.யாக இருந்த டி.ஜி. சஞ்சீவி, பம்பாயில் டிபுடி போலீஸ் சூப்பிரண்டெண்டாக இருந்த நகர்வாலா, புனாவில் தலைமை அலுவலகத்தைக் கொண்டிருந்த பம்பாய் மாகாண டி.ஐ.ஜி. வி.எச். ராணா ஆகிய மூவருக்கும் முன்கூட்டியே தகவல் தெரியும் என்று மட்பித்ரி தெரிவிக்தார்.

பம்பாயில் மகாத்மா காந்தி பிரார்த்தனைக் கூட்டத்தின் போது வெடிவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மதன்லால் பஹ்வா ஜன.20ல் போலீஸாரிடம் சதிகாரர்களின் பெயர்களைத் தெரிவித்தார். மதன்லால் பஹ்வாவின் பதிவு செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை தற்போதைய வழக்கில் சமர்ப்பிப்பது அவசியம் என்று தாம் கருதவில்லை என சாட்சி கூறினார். நகர்வாலா வாக்குமூலத்தை தாம் பதிவு செய்ததாகவும், ஆனால் சாட்சியாக அவரை அழைக்கவில்லை என்றும் மட்பித்ரி குறிப்பிட்டார்.

பம்பாய் மாகாண பிரதம மந்திரியாக இருந்த பி.ஜி. கெர்ருக்கு புனா காங்கிரஸ் தலைவர் பாலுகாகா கானட்கர் எழுதிய கடிதம் இவ்வழக்கில் பிராஸிகியஷன் தரப்பு தாக்கல் செய்யவில்லை என்றும், ஏனெனில் கெட்கர் மீதான வழக்கை கடிதம் குலைத்துவிடும் என்றும் எதிரிதரப்பு வக்கீல் பரஞ்சயே கூறினார்.

மட்பித்ரி இதனை மறுத்தார்.

மகாத்மா காந்தியைக் கொலை செய்யும் சதி பற்றி கெர்ருக்கு கானட்கர் எச்சரித்திருந்தார். இக்கடிதம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் கேட்கர் தூண்டுதலின் பேரில் இக்கடிதம் எழுதப்பட்டது என்பது தெளிவாக்கப்பட்டிருக்கும் என்று பரஞ்சபே குறிப்பிட்டார்.

காந்திஜியைக் கொலை செய்யும் சதி பற்றி முன்னதாகவே அறிவித்திருந்த தகவலை போலீஸாரிடம் மறைத்தார் என்று 79 வயது கேட்கர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருப்பது நினைவிருக்கலாம்.

Summary

Information on the Conspiracy to Assassinate Gandhiji — Reportedly Known to Three Police Officers in Advance

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.