நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கடலோரக் காவல்படையில் 365 காலிப்பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய கடலோரக் காவல் படையில் நிரப்பப்பட உள்ள 365 காலிப்பணியிடங்கள் குறித்து...

Indian Coast Guard Recruitment 2026

கடலோரக் காவல்படை வேலை - Indian Coast Guard

Published On :21 அக்டோபர் 2026, 1:17 pm IST

இந்திய கடலோரக் காவல் படையில் காலியாக உள்ள 365 நாவிக், யந்திரிக், ஹைஜீனிஸ்ட்-I பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிட்டிருந்தது. இதற்கு பத்தாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களிடம் அக்.21-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும்.

இது குறித்த விவரம் வருமாறு:

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: CGEPT01/2027 & 02/2027

பணி: Navik(General Duty)

காலியிடங்கள்: 260

தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களைக் கொண்ட பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700

பணி: Navik(Domestic Branch)

காலியிடங்கள்: 25

தகுதி: 10 ஆம் வகுப்புதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700

வயது வரம்பு: Navik (General Duty)பணிக்கு 1.11.2025 - 1.5.2009-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும் Navik(Domestic Branch பணிக்கு 1.11.2005 - 1.10.2009-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

பணி: Hygienist

காலியிடங்கள்: 20

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வுக்கு அழைக்கப்படுவர். முதல் கட்டத் தேர்வு நவம்பர் 2026-ல் நடைபெறும். எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம், சரியான நாள் விவரங்கள் தேர்வு தொடங்குவதற்கு முன்னர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வுக்கு 3 நாள்களுக்கு முன்னர் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் நுழைவுச் சீட்டு அனுப்பி வைக்கப்படும்.

கடலோரக் காவல் படை தென் மண்டல பிரிவில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.

எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு உடற்தகுதித் திறன் சோதனை நடத்தப்படும். இதில் ஆண்கள் 1.6 கி.மீ தூரத்தை 6.5 நிமிடங்களில் ஓடி கடக்க வேண்டும், 20 ஸ்குவாட் அப்ஸ் எடுத்தல்,15 புஷ் அப்ஸ் மற்றும் 15 சிட் அப்ஸ் எடுத்தல் போன்ற போட்டிகளில் தேர்ச்சி பெற வேண்டும். குறைந்த பட்சம் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். மார்பு 5 செ.மீ. சுருங்கி விரிவும் தன்மையுடன் இருக்க வேண்டும். பெண்கள் 1.6 கி.மீ தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி கடக்க வேண்டும். மேலும் 15 ஸ்குவாட் அப்ஸ் எடுத்தல் , 10 புஷ் அப்ஸ் மற்றும் 10 சிட் அப்ஸ் எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

உடற்திறன் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.550 மட்டும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.ssc.gov.in இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.10.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்கள் இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Online applications are invited from MALE and FEMALE INDIAN CITIZENS possessing educational qualifications and age as prescribed below, for recruitment as an Enrolled Person in the Indian Coast Guard through Staff Selection Commission

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.