சென்னை பல்கலைக்கழகத்தில் டிபிடி-யின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும், "குழந்தைகளுக்கான அரிய மரபணு நோய்கள் குறித்த சிறப்புத் திட்டம்" (Mission Program on Pediatric Rare Genetic Disorders) எனும் திட்டத்தில், முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள ' ப்ராஜெக்ட் அசோசியேட்-I'பணியிடத்திற்குத் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது பற்றிய விவரம் வருமாறு:
பணி: Project Associate - 1
காலியிடம் : 1
சம்பளம்: மாதம் ரூ.31,000 +24% எச்ஆர்ஏ
தகுதி: உயிர் மருத்துவ மரபியல்(Bio Medical Genetics) பாடத்தில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27-க்குள் இருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள், பெண்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு குறித்த விபரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் "Mission Program on Pediatric RareGenetic Disorders" Project பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.unom.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து "Dr. A.K. Munirajan, Professor and Head Department of Genetics, Dr. ALM PG Institute of Basic Medical Sciences, University of Madras, Taramani Campus, Chennai - 600113" என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 25.4.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு www.unom.ac.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Applications are invited from qualified candidates for the post of Project Associate-I on purely temporary basis in the DBT funded Project entitled "Mission Program on Pediatric Rare Genetic Disorders".
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அண்ணா பல்கலைக்கழகத்தில் புராஜெக்ட் அசிஸ்ட்டென்ட் பணி

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பெரியார் பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் வேலை!

‘ஆப்டோசாா்’ செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

ஜிப்மரில் புராஜெக்ட் டெக்னிக்கல் உதவியாளர் பணி!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


