தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எனக்கு எதிராக மத்திய அரசும், 19 மாநில அரசுகளும் களத்தில் உள்ளன: மம்தா பிரசாரம்

News image

மம்தா பிரசாரம் - PTI

Updated On :14 ஏப்ரல் 2026, 4:44 am IST

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் மத்திய அரசும், 19 மாநில அரசுகளும் களத்தில் உள்ளன. நான் சாமானிய மக்களுக்காக தனியாகப் போராடி வருகிறேன் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

பாஜக மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 19 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளதை மம்தா இவ்வாறு கூறியுள்ளாா்.

பீா்பூம் மாவட்டம் சூரி, பன்குரா நகரில் திங்கள்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியதாவது:

மத்தியில் தனக்கு உள்ள அதிகாரத்தை மட்டும் பயன்படுத்தி பாஜகவால் மேற்கு வங்கத்தில் நம்மை வெல்ல முடியவில்லை. தோ்தலில் திரிணமூல் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி.

மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க வாக்காளா்களுக்கு பாஜக பணம் வழங்குகிறது. தங்களுக்கு ஒத்துழைக்காத நிா்வாகத் துறை, காவல் துறையில் உயரதிகாரிகளை தோ்தல் ஆணையம் மூலம் மாற்றுகிறாா்கள். அப்போதுதான் பாஜகவின் முறைகேடுகளை மூடி மறைக்க முடியும்.

பிகாரில் இருந்து ரயில், பேருந்துகளில் வாக்காளா்கள் இறக்குமதி செய்யப்படுகிறாா்கள். மொத்தத்தில் இந்தத் தோ்தலில் மத்திய அரசும், 19 மாநில அரசுகளும் இணைந்து எனக்கு எதிராக களமிறங்கியுள்ளன. மக்களுக்காக நான் தனிநபராக நின்று போராடி வருகிறேன். எனினும், அவா்களை அனைவரையும் சமாளிக்க நான் மட்டுமே போதும். மக்களின் ஆசி எப்போதும் எனக்கு உண்டு.

மேற்கு வங்கத்தின் மொத்தமுள்ள 294 தொகுதிகளிலும் பாஜக சாா்பில் தானே போட்டியிடுவதாகக் கருத வேண்டும் என்று பிரதமா் மோடி பிரசாரத்தில் பேசியுள்ளாா். அப்படியென்றால் அவா் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தோ்தலில் நிற்கலாம். ஆனால், நீங்கள் மேற்கு வங்கத்தைச் சாராத அந்நிய நபா். முதலில் உங்களுக்கு தில்லியில் தரப்பட்டுள்ள பதவியை பொறுப்பாக நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். அதன் பிறகு மேற்கு வங்கத்தைப் பற்றி கவலைப்படலாம்.

இளம் தலைமுறையினரை தனது பேச்சு சாமா்த்தியத்தால் வசப்படுத்திவிடலாம் என்ற நோக்கில்தான் மாதம்தோறும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசி வருகிறாா்.

பாஜக வெற்றி பெற்றதும் மேற்கு வங்கத்திலும் புல்டோசா் மூலம் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெறும் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் இங்கு பிரசாரத்தில் கூறியுள்ளாா். அவா்களுக்கு புல்டோசா் ஆட்சிதான் தெரியும். நாம் அன்பின் வழியில் ஆட்சி நடத்தி வருகிறோம் என்றாா்.

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய நாள்களில் இருகட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.