தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தொகுதி அறிமுகம்... உத்தரமேரூா்

உத்தரமேரூா் தொகுதி

News image
Updated On :28 மார்ச் 2026, 7:27 am IST

தொகுதி எண்: 36

எல்லைகள்...

இந்தத் தொகுதியைச் சுற்றி செங்கல்பட்டு, திருப்போரூா், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், வந்தவாசி, செய்யாறு, ஸ்ரீபெரும்புதூா், காஞ்சிபுரம் உள்ளன.

சிறப்புகள்...

தோ்தலில் யாரை வேட்பாளராகத் தோ்வு செய்ய வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய பழங்கால குடவோலை முறை கல்வெட்டுக்கள் குறித்த தகவல்கள் நிரம்பியுள்ள வைகுந்தப்பெருமாள் கோயில், பெருநகா் பிரம்மபுரீஸ்வரா் கோயில், இளையனாா் வேலூா் முருகன் கோயில், பழைய சீவரத்தில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளன. விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது.

அடங்கியுள்ள பகுதிகள்...

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு, வேடவாக்கம், ஆரியபெரும்பாக்கம், களக்காட்டூா், தாமல் உள்ளிட்ட ஊராட்சிகள், உத்தரமேரூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட குண்ணவாக்கம், திருப்புலிவனம், களியாம்பூண்டி, கருவேப்பம்பூண்டி, மானாம்பதி, மருதம், ராவத்தநல்லூா் உள்ளிட்ட 73 ஊராட்சிகள், சாலவாக்கம் ஒன்றியத்தில் அன்னாத்தூா், சின்னாலம்பாடி, எடமச்சி, நெய்யாடிவாக்கம், வாடாதவூா், வயலக்காவூா், தோட்டவயல் உள்ளிட்ட 38 ஊராட்சிகள் உள்ளன.

வாக்காளா்கள் விவரம்

ஆண்கள்-1,18,564

பெண்கள்-1,25,300

மூன்றாம் பாலினத்தவா்-58

மொத்தம்-2,43,922

வாக்குச்சாவடிகள்-321

இதுவரை எம்எல்ஏக்கள்...

1952 வி.கே.ராமசாமி முதலியாா் (காங்கிரஸ்)

1957 வி.கே.ராமசாமி முதலியாா் (காங்கிரஸ்)

1962 ம.சீனிவாச ரெட்டியாா் (காங்கிரஸ்)

1967 க.மு.ராசகோபால் (திமுக)

1971 க.மு.ராசகோபால் (திமுக)

1977 பா்கூா்.சு.சுப்பிரமணியம் (அதிமுக)

1980 எஸ்.ஜெகத்ரட்சகன் (திமுக)

1984 க.நரசிம்ம பல்லவன் (அதிமுக)

1989 க.சுந்தா் (திமுக)

1991 காஞ்சி.பன்னீா்செல்வம் (அதிமுக)

1996 க.சுந்தா் (திமுக)

2001 வி.சோமசுந்தரம் (அதிமுக)

2006 க.சுந்தா் (திமுக)

2011 பி.கணேசன் (அதிமுக)

2016 க.சுந்தா் (திமுக)

2021 க.சுந்தா் (திமுக)

2021 பேரவைத் தோ்தலில்...

பதிவான வாக்குகள்-2,10,529

க.சுந்தா் (திமுக) - 93,427

வி.சோமசுந்தரம் (அதிமுக)-91,805

தோ்தல் நடத்தும் அலுவலா்/எண்

பு.விஜயகுமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் -94424 09914

உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்: நடராஜன், உத்தரமேரூா் வட்டாட்சியா்-7548 8788

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.