சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தவெக தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்னும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் இருக்கிறது.
திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸின் 5 உறுப்பினர்களின் ஆதரவை நேற்று தவெக பெற்ற நிலையில், இன்னும் 6 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. இடதுசாரிகள் (4), விடுதலைச் சிறுத்தைகள் (2) கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது.
இதனிடையே, நேற்று மாலை ஆளுநர் ஆா்.வி. ஆா்லேகரை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் உரிமை கோரினார். ஆனால், இதுவரை ஆட்சி அமைக்க விஜய்யை ஆளுநர் அழைக்கவில்லை.
ஆளுநர் மாளிகையில் இருந்து விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், அதிகாரிகள் பதவி ஏற்புக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய முற்பட்டது கடுமையான விமா்சனத்துக்கு உள்ளானது. இதுகுறித்து தலைமைச் செயலா், உள்துறைச் செயலா், காவல் துறைத் தலைவா் உள்ளிட்டவா்களிடம் தனது அதிருப்தியை ஆளுநா் தெரிவித்ததாக அரசு வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த நிலையில், நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் பதவியேற்பு விழாவுக்கு செய்யப்பட்டு வந்த முன்னேற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க தாமதம் ஏற்படும் நிலையில், முதல்வருக்கான பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் இருப்பதாக விஜய்யிடன் அதிகாரிகள் எடுத்துரைத்தை அடுத்து, பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Preparations for Vijay's Swearing-in Ceremony Halted!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் மீண்டும் ஆளுநருடன் சந்திப்பு!

பரபரப்பாக காணப்பட்ட பனையூா்

விஜய் பதவியேற்பு விழாவுக்கு ராகுலுக்கு அழைப்பு!

விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

