சென்னை : தமிழக முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் பதவியேற்கும் விழா மே 10 காலை 10 மணிக்கு நடைபெறுவதன் பின்னணியில் சுவாரசியம் உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாகத் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை அவர்கள் பெறவில்லை. இந்த இக்கட்டான சூழலில், தவெகவுக்கு(107 எம்எல்ஏக்கள்) காங்கிரஸ்(5), இந்திய கம்யூனிஸ்ட்(2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(2), விடுதலை சிறுத்தைகள்(2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(2) என மொத்தம் 120 எம்எல்ஏக்கள் (விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் தவெகவில் 107* எம்எல்ஏக்கள்) ஆதரவு கிடைத்தது.
இதையடுத்து,புதிய அரசு அமைப்பதற்கான ஆதரவும் பெரும்பான்மையும் தவெகவுக்கு இருப்பதாக விஜய் வழங்கிய ஆட்சிகோரும் உரிமை கடிதத்தை பெற்றுக்கொண்ட ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், அதன்பின் அதனைப் பரிசீலித்து இறுதியில், தவெக தலைவர் சி. ஜோசப் விஜய்யை தமிழக முதல்வராக நியமித்து கடிதத்தை வழங்கினார்.
தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை (மே 10) காலை 10 மணிக்கு பதவியேற்பார் என ஆளுநர் மாளிகை இன்று (மே 9) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் விஜய்க்கு தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். விஜய்யுடன் சேர்ந்து 9 அமைச்சர்களும் நாளையே பதவியேற்பார்கள் என தவெக வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
முதலில், மே 10 மாலை 3 மணிக்குப் பிறகு தமிழக முதல்வராக விஜய் பதவியேற்கும் விழா நடைபெறவிருந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், அந்த நிகழ்ச்சி காலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் மே 10 காலை 10 மணிக்கு பதவியேற்க நேரம் குறித்துக் கொடுத்ததாகவும் அதன் அடிப்படையில், பதவியேற்பு விழா அந்நேரத்தில் நடைபெற உள்ளதாகவும் தவெக தலைமைக்கு நெருக்கமான தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Summary
TVK leader C. Joseph Vijay to assume office as the Chief Minister of Tamil Nadu, scheduled to take place on May 10 at 10:00 AM. There is an interesting backstory behind the ceremony.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக முதல்வர் விஜய்! ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பது எப்போது?

ஆளுநருடன் விஜய் சந்திப்பு! ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

தமிழ்நாடு தேர்தல்! தவெக வெற்றிபெற்றது எப்படி?
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
