தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று தமிழ்ப்புத்தாண்டு பஞ்சாங்கம் முன்கூட்டியே கணித்திருப்பது பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியான நிலையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆட்சியை இழந்த திமுக 59, அதிமுக 47, காங்கிரஸ் 5, பாமக 4, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 2 தொகுதிகளிலும், பாஜக, தேமுதிக அமமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், மார்க்ஸிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியிருந்தது.
இந்த நிலையில், ஆட்சியமைக்க ஆதரவு கோரி தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டதன் பேரில் தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் தேசிய தலைமை ஆதரவு தெரிவித்தது.
வரும் தேர்தல்களிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்றும் அதேநேரத்தில் மதவாத சக்திகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கான பரபரப்பு ஒரு வழியாக சற்று குறைந்த நிலையில், தவெக ஆட்சி அமைக்குமா? கூட்டணி ஆதரவு கிடைக்குமா? என்ற சந்தேகங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து 5 பேர் ஆதரவளித்துள்ளனர். மேலும், தவெக ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சற்று வித்தியாசமாக தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை பஞ்சாங்கம் கணித்துள்ளது தமிழ்ப்புத்தாண்டு பஞ்சாங்கத்தில், கூட்டணி ஆட்சி என கூறப்பட்டுள்ளது.

அதாவது நிகழும் பராபவ தமிழ் வருடத்தின் ஆற்காடு பஞ்சாங்கத்தில், ஆண்டு பலன்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தப் பஞ்சாங்கத்தில் உள்ள பல கணிப்புகள்படி, ‘வரும் தமிழ் வருடத்தில் உலகளாவிய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளில் எதிர்பார்த்த வெற்றி யாருக்கும் கிடைக்காது. கூட்டணி ஆட்சி தான் அமையும்’ என கூறப்பட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியில் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளதால், தவெகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 112 (107+5) ஆக உயர்ந்துள்ளது. எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தவெகவுக்கு இன்னும் 6 உறுப்பினர்கள் தேவைப்படுகிறது.
ஆளுநர் இரண்டு நாள்களில் ஆதரவை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பதாக இவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, விஜய்யால் பெரும்பான்மை உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அரசமைப்பது தொடர்பாக திமுகவின் 2 ஆம் கட்டத் தலைவர்களுடன் அதிமுகவின் 2 ஆம் கட்டத் தலைவர்கள் பேச்சு நடத்தி புதிய கூட்டணியில் ஆட்சியமைக்கபோகிறார்களா? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.
Summary
The Tamil New Year almanac's advance prediction that a coalition government will be formed in Tamil Nadu has sparked both excitement and astonishment.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கூட்டணி உறுதியானது! விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!

தமிழ்நாட்டில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி! தவெக - காங்கிரஸ் புதிய கூட்டணி!

காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்

5 மாநில பேரவைத் தேர்தல்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - முழு விவரம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


