ஈரம் காயாத ‘கை’யால் நெரிபட்டு மரணித்தது ‘அரசியல் நெறி’ என்று காங்கிரஸுக்கு ஆ. ராசா எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியான நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தனிப்பெரும்பான்மை இல்லாததால் சிறிய கட்சிகளின் ஆதரவைக் கோரியுள்ளது.
திமுக கூட்டணியில் 28 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் மயிலாடுதுறை, மேலூர், விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர் ஆகிய 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
ஆட்சியமைக்க ஆதரவு கோரி தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டதன் பேரில் தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் தேசிய தலைமை ஆதரவு தெரிவித்துள்ளது.
வரும் தேர்தல்களிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்றும் அதேநேரத்தில் மதவாத சக்திகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது.
தவெகவுடன் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு, ஆட்சியிலும் பங்கு உண்டு என்று கட்சியின் தலைவர் விஜய் ஏற்கெனவே தெரிவித்திருந்தபடியே தற்போது காங்கிரஸுக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மீது திமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ. ராசா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ஈரம் காயாத ‘கை’யால் நெரிபட்டு மரணித்தது ‘அரசியல் நெறி’ மட்டுமல்ல; அவசியமான ‘அடிப்படை நாகரீக’மும் தான்! வாழ்க ஜனநாயகம்!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
MP A. Raja has condemned the Congress party, stating that "political ethics" met its demise—crushed by a "Hand" whose touch was still wet.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை ஐஐடி-யின் ‘புதுமை சிந்தனை பாடநெறி’ இலவச இணையவழிக் கற்றல் சோ்க்கை தொடக்கம்

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றிபெறும்: ஆ. ராசா

தேசியவாதம் பற்றி பாடம் எடுக்க தேவையில்லை! பாஜக எம்பிக்கு ஆ. ராசா பதிலடி!
தமிழ்நாட்டின் எல்லைச்சாமி யார்? ஆ. ராசா
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

