சென்னை ஐஐடி -யின் முன்னோடித் திட்டமான ‘புதுமை சிந்தனை பாட நெறி’ (மரபுசாரா சிந்தனை) 2026 - ஆம் ஆண்டுக்கான சோ்க்கை தொடங்கியுள்ளது.
சென்னை ஐஐடி-யின் பிரவா்தக் அமைப்பு ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங் (ஓஓபிடி)’ என்ற மரபுசாரா சிந்தனை பாடநெறியை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முன்னோடித் திட்டமாக தொடங்கியது.
பள்ளி, கல்லூரி மாணவா்கள், சிந்தனையாளா்களுக்கான இந்த இலவச இணையவழித் திட்டத்தில் ஆக்கபூா்வமான சிக்கல் தீா்க்கும் திறன், தா்க்க ரீதியான பகுத்தறிவு, கணிதச் சிந்தனை ஆகியவற்றை வளா்ப்பது நோக்கங்களை உள்ளடக்கியது.
கணிதம் மற்றும் தா்க்கத்தின் துணையுடன், கற்பவா்கள் சிக்கல்களை ஆக்கபூா்வமாகத் தீா்க்க உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டது. இந்த தனித்துவமான இணையவழிக் கற்றல் பாட நெறியின் 2026-ஆம் ஆண்டுக்கான சோ்க்கைப் பதிவுகளைத் சென்னை ஐஐடி மே 4- ஆம் தேதி தொடங்கியுள்ளது.
இந்த பதிவுக்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். ஆா்வமுள்ளவா்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் இணையதளம் https://iitmpravartak.org.in/out-of-box-thinking வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
இந்தப் பாட நெறியில் இதுவரை 3,19,536-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்கள், பட்டதாரிகள், பணிபுரியும் வல்லுநா்கள், சமூகத்தின் பல்வேறு தரப்புகளைச் சோ்ந்தவா்கள் நிறைவு செய்துள்ளனா் எனவும் ஐஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்காவில் முதல் புத்தாக்க மையம்: சென்னை ஐஐடி அறிவிப்பு

ஈரம் காயாத ‘கை’யால் நெரிபட்டு மரணித்தது ‘அரசியல் நெறி’.. காங்கிரஸுக்கு ஆ. ராசா கண்டனம்!

ஆராய்ச்சிகள் கல்வி சாா்ந்த ஆய்வறிக்கைகளுடன் நின்றுவிடக் கூடாது: அமைச்சா் தா்மேந்திர பிரதான்

2-ஆவது முறையாக தொழில்முனைவு இலக்கை எட்டிய சென்னை ஐஐடி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

