தேர்தல் முடிவுகள் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக தலைமை இன்று ஆலோசனை நடத்தவுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை மே 4 காலை 8 மணிக்குத் தொடங்கி நள்ளிரவையும் கடந்து நீடித்தது.
234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்து அதிகாரபூர்வமாக முடிவுகள் வெளியாகியுள்ளன.
தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
திமுக கூட்டணி 73 இடங்களைப் பிடித்து ஆட்சியை இழந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக முக்கியத் தலைவர்கள் பலரும் தோல்வியடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் முடிவுகள் தொடர்பாக பற்றி கூட்டணி கட்சிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் ஆட்சியமைத்தால் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுவார் என கூறப்படும் நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவெடுக்கும் விதமாக இன்று ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அந்தக் கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில் அவர்கள் தவெகவுடன் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இன்று நடைபெறும் திமுக ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்குமா என்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.
Summary
M.K. Stalin Consults with Alliance Partners! Will the Congress Participate?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெக ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு?

சூசகமான பதிவா? தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் ஜோதிமணி ட்வீட்!

வாக்குக் கணிப்பு: உண்மையும் அல்ல; பொய்யும் அல்ல!

குடும்ப ஆட்சிக்கு எதிரான தேர்தல் இது! மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு நேர்காணல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

