தவெக தலைவர் விஜய்யின் சென்னை பெரம்பூர் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது.
நாளை மறுநாள் சென்னை பெரம்பூரில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு தனது தேர்தல் பிரசாரத்தை அவர் தொடங்குகிறார். தொடர்ந்து, கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் விஜய் சனிக்கிழமை மனு அளித்த நிலையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் விஜய் பிரசாரத்தை தொடங்க வேண்டும். பெரம்பூரில் 2 மணி நேரத்திற்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும். பொதுசொத்துக்கு சேதம் விளைவிக்கக்கூடாது ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, பெரம்பூரில் பிரசாரத்துக்கு அனுமதிகோரிய தவெகவின் மனுவில், விஜய்யின் தெருமுனைப் பிரசாரம் அம்பேத்கர் கல்லூரி முதல் சர்மா நகர் வரை சாலை வழியாகச் சென்று, வில்லிவாக்கத்தில் முடிவடைவதாகக் குறிப்பிட்டிந்தனர்.
தொடர்ந்து, முல்லை நகர் சந்திப்பில் நடைபெறும் தெருமுனைப் பிரசாரத்தில் சுமார் 3,000 பேர் கூடுவார்கள் என்றும், சுமார் 20 ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த அனுமதி கோரியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், முல்லை நகர் சந்திப்பு பகுதியில் 3,000 பேர் கூடுவதற்கு உகந்தது அல்ல எனக் கூறி, அனுமதி கடிதத்தை காவல்துறை நிராகரித்தது.
இதையடுத்து தவெக பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து விஜய் புகார் அளித்தார்.
சில உயர் அதிகாரிகளை மாற்ற கோரியும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அவர் புகார் அளித்திருந்தார்.
Summary
The Election Commission has granted permission for Tvk leader Vijay campaign in Chennai's Perambur.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று விஜய்யின் பெரம்பூர் பிரசாரம் ரத்து!
பெரம்பூர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவெக தலைவர் விஜய் பெயர் எங்கே இடம்பெறும்?

விஜய்யின் கன்னியாகுமரி பிரசாரத்துக்கு அனுமதி!

விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


