/

காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? ராகுல் நாளை ஆலோசனை!

காங்கிரஸின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் பற்றி...

News image

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 12:57 pm IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து திமுக தலைமையுடன் ஆலோசனை நடத்திய அக்கட்சியின் நிர்வாகிகள், விருப்பப் பட்டியலையும் அளித்துள்ளனர்.

மற்ற கூட்டணிக் கட்சிகளிடமும் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை பெற்ற திமுக, தொகுதிகளை இறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Who are the Congress candidates? Rahul to hold meeting tomorrow!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.