தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று இரவு ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் திமுக தலைமை கடந்த மார்ச் 28 ஆம் தேதியே அறிவித்துவிட்டது.
திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து, பல கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் இன்னமும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
கடந்த வாரம் தில்லியில் கூடிய காங்கிரஸ் தேர்வுக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு வேட்பாளர் பட்டியலை கண்டு ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்ததாகவும், சில வேட்பாளர்களை மாற்ற உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
வேட்புமனு தாக்கல் தொடங்கி நான்கு நாள்களாகும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் தொடரும் இழுபறி பேசுபொருளாகி இருக்கிறது.
இதனிடையே, தமிழ்நாடு தேர்தல் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக, காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு மாணிக்கம் தாகூர் நேற்று கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், கேரள பயணத்தை முடித்து தில்லி திரும்பியுள்ள ராகுல் காந்தி, இன்றிரவு 8 மணிக்கு தேர்வுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஏப்ரல் 6 ஆம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடையவுள்ளதால், இன்றிரவு நடைபெறும் கூட்டத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Congress Candidates Finalized Today? Rahul Holds Consultations!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக அணியிலிருந்து காங்கிரஸ் விலகல் ‘இண்டி’ கூட்டணிக்கு இறுதி ஊா்வலம்; பாஜக கருத்து

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏன்?

காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? ராகுல் நாளை ஆலோசனை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


