கோவை வடக்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா புதன்கிழமை பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தேர்தல் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்தியில் ஆளும் கட்சியான பாஜக சார்பில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னவீஸ், பஜன்லால் சர்மா உள்ளிட்டோரும் தமிழ்நாட்டுக்கு வந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் இன்று நடைபெறும் பிரசாரத்தில் பிரதமர் மோடி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
திமுகவுக்கு ஆதரவாக தில்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் வருகிற ஏப். 20, 21 ஆகிய தேதிகளில் சென்னை வரவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கோவை வடக்கு சட்டப்பேரவை பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசனுக்கு ஆதவராக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
இன்று மாலை 4.30 அளவில் பிரசாரத்தைத் தொடங்கும் ரேகா குப்தா, அவிலா ஸ்கூல் அருகில் வெங்கிடாபுரம், சின்னம்மாள் நகர், கண்ணப்பா நகர் 5வது வீதி, கே கே புதூர், எஸ்பிஐ ரோடு, நாராயணசாமி வீதி ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.
இதையும் படிக்க... நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
Summary
Delhi Chief Minister Rekha Gupta is set to campaign on Wednesday in support of Vanathi Srinivasan, the BJP candidate for Coimbatore North.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரம்!

வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடிகா் சுரேஷ்கோபி பிரசாரம்

பாஜக வேட்பாளா் வானதியை ஆதரித்து தில்லி முதல்வா் ரேகா குப்தா பிரசாரம்
மேற்கு வங்கத்தில் பெண் முதல்வருக்கு எதிராக பாஜக பெண் முதல்வர் பிரசாரம்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

