மரணமே வந்தாலும் எனது திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்கிறார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டில் பிரசாரம் மேற்கொண்டுள்ள தமிழ்நாட்டு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மறைமலைநகரில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “என் மீது அவதூறு பேசுவதையே பலரும் விரும்புகின்றனர். அவர்களில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் ஒருவராக இருக்கிறார். இந்த உலகத்திலேயே மரணத்தைச் சந்திக்காத எவரும் இருக்க முடியாது. யாரும் மரணத்தைத் தவிர்க்க முடியாது.
நான் முதல்வராக வந்தவுடன் முதல் கையெழுத்தே மகளிர் இலவசப் பேருந்துக்கும், மகளிர் உரிமைத் தொகைக்கும் போட்டேன். இந்த அனைத்துக்கும் கையெழுத்துப் போட்ட நான் மண்ணுக்குள் போக வேண்டுமாம்.
குழந்தைகள் அனைவரும் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்று காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் என அவர்களின் வெற்றியைப் பார்த்துப் பெருமைப்படுகிற நான் கரோனாவில் போயிருக்க வேண்டுமாம். நான் கரோனாவில் போயிருக்க வேண்டுமாம். மாதந்தோறும் உரிமைத் தொகை கொடுத்த நான் இல்லாமல் போகனுமாம். இந்த மாதிரியான திட்டங்களை செயல்படுத்தும் நான் மண்ணுக்குள் போகனுமாம்.
இந்த ஸ்டாலினுக்கும் மரணம் வரும். என்னையும் மண்ணில் புதைப்பார்கள். சவால் விட்டு சொல்கிறேன். இந்த ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களைப் மண்ணில் புதைக்கிற துணிச்சல் யாருக்கும் வராது. மரணமே வந்தாலும், என்னுடைய திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்” என்றார்.
Summary
Chief Minister Stalin has stated that even if death were to come, as long as his plans endure, it is Stalin who rules Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்

திமுக இருக்கும் வரை காவிக்கொடி பறக்காது: முதல்வர் ஸ்டாலின்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
