தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பினராயி ஆட்சியால் சலிப்பு! மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள் : கே.சி. வேணுகோபால்

100 தொகுதிகளுக்கு மேல் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெறும் என கே.சி. வேணுகோபால் பேசியது குறித்து...

News image

கே.சி. வேணுகோபால் - ஏஎன்ஐ

Updated On :9 ஏப்ரல் 2026, 10:48 am IST

கேரளத்தில் பினராயி விஜயன் ஆட்சியால் மக்கள் சலிப்படைந்துவிட்டதாகவும், இம்முறை மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று (ஏப். 9) தெரிவித்தார்.

கேரளத்தில் 140 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி என மும்முனைப்போட்டி நிலவுகிறது.

தேர்தலில் 883 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2.71 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 30,471 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

அம்பலபுழாவில் வாக்கு செலுத்திய பிறகு செய்தியாளர்களுடன் கே.சி. வேணுகோபால் பேசியதாவது:

''நாங்கள் (காங்கிரஸ் கூட்டணி) இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெறப்போகிறோம். இத்தேர்தலில் நாங்கள் 100-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றுவோம். மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக பினராயி விஜயன் முதல்வராகத் தொடர்வதால், மக்கள் சலிப்படைந்துவிட்டனர். மக்கள் விரோதப் போக்கைக் கொண்ட, ஆணவம் மிகுந்த இந்த முதல்வர் மேலும் 5 ஆண்டுகளுக்குத் தொடர வேண்டுமா? என்பதே இத்தேர்தலில் மக்கள் முன் உள்ள கேள்வி.

ஐயப்பனின் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் குற்றவாளியையும், இக்குற்ற வழக்கையும் மூடிமறைக்க முயன்று வருகிறது. தங்கக் கொள்ளைக் குற்றவாளிகளுக்குத் துணை நின்ற ஒரு அரசாங்கம் தங்களுக்குத் தேவையில்லை என்று மக்கள் நினைக்கின்றனர்'' எனக் குறிப்பிட்டார்.

Summary

Keralam Elections 2026 fed up with Pinarayi Vijayan as the CM K.C. Venugopal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.