கேரள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல்வர் பினராயி விஜயன், கண்ணூர் தொகுதியில் தனது வாக்கை செலுத்தினார். கண்ணூர் தொகுதியில் உள்ள ஆர்.சி. அமலா ஆரம்பப் பள்ளியில் அவர் வாக்களித்தார்.
கேரளத்தில் 140 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 883 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2.71 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 30,471 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இதேபோன்று அரசியல் கட்சித் தலைவர்களும் வெற்றிபெறும் முனைப்பில் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
பி.ஏ. பேபி
திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பி.ஏ. பேபி வாக்கு செலுத்தினார்.
ராஜீவ் சந்திர சேகர்
இதேபோன்று, திருவனந்தபுரம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திர சேகர் வாக்களித்தார்.
ஜார்ஜ் குரியன்
மத்திய இணை அமைச்சரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கஞ்சிரபள்ளி வேட்பாளருமான ஜார்ஜ் குரியன் கோட்டையம் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.
ரமேஷ் பிஷாரடி
ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் ரமேஷ் பிஷாரடி பாலக்காடு தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
வி.டி. சதீஷன்
பரவூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் கேரள எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி. சதீஷன் எர்ணாகுளத்தில் உள்ள கேசரி அரசு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் வாக்கு செலுத்தினார். ''ஐக்கிய ஜனநாயக முன்னணி 100 இடக்களுக்கு மேல் வெற்றி பெறும் என நம்பிக்கை'' தெரிவித்தார்.
பி.ஏ. முகமது ரியாஸ்
இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் பி.ஏ. முகமது ரியாஸ் கோழிக்கோடு மாவட்டத்தின் பேப்பூர் தொகுதியில் வாக்கு செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், ''இடது ஜனநாயக முன்னணி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் எனக் கூறினார். பெண்கள், இளைஞர்கள், முதியவர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன'' எனக் குறிப்பிட்டார்.
Summary
Kerala election 2026 Pinarayi Vijayan and Rajeev Chandrasekhar Fulfill Their Democratic Duty
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பினராயி விஜயன் ராஜிநாமா!

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெற்றி!

கேரளம்: இதுவரை நடந்திராத தேர்தல் சாதனை என்ன? செய்திகள் உடனுக்குடன்!

கேரள சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்களித்த முதல்வர் பினராயி விஜயன்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


