பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதிவிட்டு அடுத்து நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்காகவும், பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளுக்காகவும் விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
பொதுத் தேர்வுக்கு படித்த பாடங்கள்தானே, பார்த்துக் கொள்ளலாம் என சோம்பலுடன் இருந்துவிடாமல், நுழைவுத் தேர்வுகளுக்கான தனிக் கவனம் செலுத்தி படிப்பது நிச்சயம் அவசியம்.
மாணவர்கள் எந்தப் பல்கலையில் பயில வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அந்த பல்கலையை முன்கூட்டியே சென்று பார்த்துவிட்டு, அந்த ஆர்வத்தோடு, தேர்வு வரை முழுமையாகப் படித்து தேர்வெழுதலாம்.
பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளின்போது கவனிக்க வேண்டியவை...
1. பல்கலைக்கழகங்கள் சில தற்போது தவறான மதிப்பெண்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் வழங்குகின்றன. எனவே, நீங்கள் எழுதப்போகும் நுழைவுத் தேர்வுகளில் இந்த பிரச்னை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
2. கணினி முறையில் நுழைவுத் தேர்வு நடக்கும்போது, ஒருமுறை ஒரு கேள்வியை பதிலளிக்காமல் நகர்த்திவிட்டால், மீண்டும் அந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியுமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஒருவேளை, பதிலளிக்க முடியும் என்றால் புரியாத கேள்விகளை நகர்த்திவிட்டு, தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்கலாம்.
3. சில கேள்விகளுக்கு சரியான விடைகள் என இரண்டு வாய்ப்புகள் தரப்படும். அதாவது, சரியான பதில்கள் ஒரு வாய்ப்புகள். இதில் விடைகள் என்ன என்று இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படும். எனவே, மாணவர்கள் அவசரத்தில் முதலில் இருக்கும் வாய்ப்புகளை மட்டும் பார்த்து அதைப் பதிவு செய்துவிடக் கூடாது. ஒவ்வொரு கேள்வியையும், அடுத்த கேள்வி வரை என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
4. ஜேஇஇ நுழைவுத்தேர்வுகளைப் போல சில தேர்வுகளின்போது கணக்குப்போட்டுப் பார்த்த பேப்பர்களை அங்கே வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளில் போட்டுவிட வேண்டும்.
5. நுழைவுத் தேர்வுக்குச் செல்லும்போது சுற்றுலா செல்வது போல செல்லாமல், நன்கு படித்து கடின முயற்சியோடு எழுதுவதுதான் நல்லது.
6. பல்கலைக்கழகத்துக்குச் சென்று படித்தால் இப்படியொரு பல்கலையில் படிக்க வேண்டும், இத்தனை நாள்கள் நுழைவுத் தேர்வுக்கு படிக்காமல் விட்டுவிட்டோமே என்று அழது புலம்பாமல், இந்த நாள் முதல் படிக்கத் தொடங்குங்கள்.
7. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு சில பல்கலைக்கழகங்கள் நேர்காணல் வைத்துத்தான் தேர்வு செய்யும். அதனையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
8. நுழைவுத் தேர்வுகளின்போது, முன்கூட்டியே பல்கலைக்கழகம் சென்று அங்குள்ள வசதிகள், மாணவர்களிடம் பேசி பல விஷயங்களை அறியலாம்.
9. பல்கலைக்கழகங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் விவரங்களையும், நன்கு புரிந்துகொள்ளுங்கள்.
10. சில பல்கலைக்கழகங்கள் அளிக்கும் எந்தப் பாடத்தையும் படிக்கலாம் என்பது போல சிறப்பாக இருக்கும். அவற்றை மாணவர்கள் தவர விடக் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேரவைப் பதவிக் காலம் நாளையுடன் நிறைவு! அடுத்து ஆளுநர் செய்யப்போவது என்ன?

புதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?

அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரியில் மே 9, 10-இல் டான்செட், சீடா நுழைவுத் தோ்வு! 2,753 மாணவா்கள் பங்கேற்பு

40 வயது நெருங்கிவிட்டதா? கண்டிப்பாக செய்ய வேண்டியவை..!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

