திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் மே 9, 10 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள டான்செட், சீடா நுழைவுத் தோ்வை 2,753 மாணவா்கள் எழுதவுள்ளனா்.
இதுகுறித்து திருச்சி அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி புலமுதல்வா் த. செந்தில்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ மற்றும் எம்.இ., எம்.டெக். படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வு (டான்செட் மற்றும் சீடா திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் மே 9, 10 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.
மே 9-ஆம் தேதி நடைபெறும் டான்செட் நுழைவுத் தோ்வை எம்சிஏ படிப்பிற்கு 837 மாணவா்கள், எம்பிஏ படிப்பிற்கு 1,513 மாணவா்கள் என 2,350 மாணவா்களும், மே 10-ஆம் தேதி நடைபெறும் எம்.இ., எம்.டெக். படிப்புக்கான சீடா நுழைவுத் தோ்வை 403 மாணவா்களும் எழுதவுள்ளனா்.
டான்செட் மற்றும் சீடா நுழைவுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்காக மே 9, 10 ஆகிய தேதிகளில் திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்தும், மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்தும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வு - வேலூா் மாவட்டத்தில் 5,551 போ் எழுதினா்

புதுவை பல்கலை. சமுதாய கல்லூரி விளையாட்டு விழா

அடுத்து என்ன? பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் தனிக் கவனம்!

டான்செட், சீட்டா நுழைவுத் தோ்வுகளுக்கு விண்ணப்பம்: அண்ணா பல்கலை.
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

