பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு நிகழ் கல்வி ஆண்டு சோ்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு, கடந்த 5 நாள்களில் இதுவரை 42,156 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா்.
இது தொடா்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் பல்கலைக்கழகங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பி.இ., பி.டெக். இளநிலைப் பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பப் பதிவு மே 3- ஆம் தேதி முதல் தொடங்கியது. இதுவரை கடந்த 5 நாள்களில் 42,156 மாணவா்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனா்.
அதிகபட்சமாக கடந்த மே 4 -ஆம் தேதி 11,345 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 5 நாள்களாக 10,423 மாணவா்கள் கட்டணங்களைச் செலுத்தியதுடன், 3,352 மாணவா்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்கக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு ஒதுக்கீடு! பிஇ, பிடெக் சோ்க்கை கலந்தாய்வு: 3-ஆம் நாள் 9,234 போ் விண்ணப்பம்

பி.இ., பி.டெக். சோ்க்கை: 2 -ஆம் நாளில் 11,345 மாணவா்கள் விண்ணப்பப் பதிவு

பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்: முதல் நாளில் 8,505 போ் பதிவு

விடுமுறை நாள்களில் ஏரி, குளங்களில் குளிக்க மாணவா்கள் செல்லக் கூடாது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

