1997-ல் ரசிகையின் கடித்தத்திற்குத் தற்போதையை முதல்வர் விஜய் அளித்த பதில் கடிதம்.
அன்புள்ள அண்ணன் விஜய்க்கு உங்கள் தங்கை சுமதி எழுதுவது...
உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு அண்ணன் இல்லாத குறையை நீங்கள்தான் தீர்க்க வேண்டும். என்னை உங்கள் தங்கையாக ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் நடித்த அனைத்து படங்களையும் பார்த்தேன். நீங்கள் சங்கவியுடன் நடித்த படம் எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை. அது ஏன் என்று நீங்கள் கண்டுபிடிக்கவும்.
என் தோழி சுஜி உங்களை மாமாவாக நினைத்து நினைத்து உருகிவிட்டாள். என்னால் அவனை திருந்தவே முடியவில்லை. அவள் உங்களைப்பற்றி சொல்லும் போதெல்லாம் எனக்கு கோபம் வரும், ஏன் என்றால் நீங்கள் என் அண்ணன் அல்லவா! என் வீட்டிற்கு நான் ஒரே பிள்ளையாக இருந்தாலும் நான் என் மனதில் இரண்டு பிள்ளையாக நினைத்துக் கொள்கிறேன். அந்த இரண்டு பிள்ளைகளில் நீங்கள் ஒன்று.
அண்ணா, அப்பாவையும் அம்மாவையும் கேட்டதாகச் சொல்லுங்கள். உங்கள் திருமணத்தை உங்கள் தங்கை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். இந்தக் கடிதத்திற்குப் பதில் எழுதினால்தான் நீங்கள் என்னை தங்கையாக ஏற்றுக் கொண்டதாக அர்த்தம்.
உங்களோடு ஒரு சின்ன பேட்டி:
உங்களுக்குப் பிடித்த உணவு?
உங்களுக்குப் பிடித்த கலர்?
உங்களுக்குப் பிடித்த உடை?
உங்களுக்கு மிகவும் பிடித்தவர் யார்?
இப்படிக்கு
உங்கள் தங்கை எஸ். சுமதி, சேலம்.
------------------------
விஜய் எழுதும் மடல்.
உங்களின் கடிதம் கண்டு மிகவும் சந்தோஷம் அடைந்தேன். எனக்கு தங்கை இல்லாத குறையை நீங்கள் எல்லாம் தீர்த்து வருகிறீர்கள். எனக்கு உடன் பிறந்த ஒரு தங்கை இல்லையே என்று இது நாள் வரை கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். அது உங்கள் கடிதத்தைப் படித்தவுடன் மாறிவிட்டது.
எனக்குத் தங்கை இல்லாத குறையை நீங்கள் தீர்க்கிறபோது, உங்களுக்கு அண்ணன் இல்லாத குறையை நான் தீர்க்கிறேன். என்னை அண்ணன் என்று அழைக்க உங்களுக்கு இனி முழு உரிமை உண்டு.

சங்கவியோடு நடித்தது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று எழுதியிருந்தீர்கள். என்னுடைய தொழில் நடிப்பு. டைரக்டர்கள் யாரோடு சேர்ந்து நடிக்கச் சொல்கிறார்களோ அவர்களோடு நான் நடித்தாக வேண்டும். அவரோடு சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று நீங்கள் எழுதியது என் மீது நீங்கள் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.
உங்கள் தோழி சுஜியிடம் என்னை மாமாவாக நினைத்திருக்கும் மனதை மாற்றிக் கொள்ளச் சொல்லுங்கள். என் அப்பா, அம்மா ஆண்டவன் அருளால் சுகமோடு இருக்கிறார்கள்.
உங்கள் பேட்டிக்கு பதில்:
எனக்குப் பிடித்த உணவு - சுத்த சைவம்
எனக்குப் பிடித்த கலர் - வெண்மை
எனக்குப் பிடித்த உடை ஜீன்ஸ் - டிசர்ட்
எனக்க மிகவும் பிடித்தவர் அம்மா - அப்பா
(சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் பிப். 1 1997 ஆம் ஆண்டு வெளியான கடிதம்.)
A reply letter sent by the current Chief Minister Vijay in 1997 to a fan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சினிமா சோறு போடாது... ரசிகருக்கு அறிவுரை சொன்ன விஜய்!

அண்ணா, விரலை வெட்டி அனுப்பவா? ரசிகைக்கு விஜய் அளித்த பதில் என்ன?

உமா, நமக்குள் காதல் வேண்டாம்! ரசிகையின் கடிதத்திற்கு விஜய்யின் பதில்!
இளையராஜா - 75 கேள்விகளும் பதில்களும்!
விடியோக்கள்

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை


